Idly

1000 years of traditional food is Idly.  Kannada author Shivakotiacharya first wrote about Idly in his book Vaddaradhane. This book belongs to the 9th century AD.

Claude Alvares says that there is no other place in the world where food is prepared with such extreme techniques as Idly. 1000 years of tradition Idli has been a place even today for our breakfast. Idly is easy to digest and easy to prepare.

Idly Podi

Idly is the best breakfast but for those who have to leave in a hurry in the morning, half the time is spent thinking about what Curry (Kulambu) to prepare today.

So having Idly podi at home will make breakfast even easier.



Native Special delivers the tirunelveli Kurunai Idli Podi. It’s absolutely full of flavor and aroma.

 

இட்லி

1000 ஆண்டுகள் பாரம்பரிய உணவாக இட்லி இருக்கின்றது. Shivakotiacharya எனும் கன்னட எழுத்தாளர்  Vaddaradhane எனும் புத்தகத்தில் இட்லியினை பற்றி முதல் முதலில் எழுதி இருக்கின்றார். இந்நூல் கி.பி  9ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.  

இட்லி போன்று  அதீத நுட்பத்துடன் நொதித்து ஒரு உணவை தயாரிக்கும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை என்கிறார் கிளாட் ஆல்வரிஸ். இத்தனை ஆண்டுகள் பாரம்பரியம் மிகுந்த இட்லி இன்றும் நம் உணவில் இடம் பெறுவதற்கு அதன் சிறப்பு தன்மைதான் காரணம். இட்லி எளிதில் செரிமானகும் உணவு, செய்வதும் சுலபம்.

இட்லி பொடி

இட்லி சிறந்த காலை உணவாக இருந்தாலும் அவசர அவசரமாக காலையில் கிளம்புவர்களுக்கு என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசிப்பதற்கே பாதி நேரம் போய் விடுகிறது.


அதனால் வீட்டில் இட்லி பொடி இருந்தால் காலை உணவு இன்னும் சுலபமாகி விடும்.



நம்ப நேட்டிவ் ஸ்பெஷல் சுவையும், மணமும் நிறைந்த முழுக்க முழுக்க கைகளால் செய்யப்பட்ட  திருநெல்வேலி குருணை இட்லி பொடியினை உங்களுக்காக வழங்குகிறது.   

தமிழர் உணவின் அறிவியல் – (The Tamil Food Science)

ஒரு நிலப்பரப்பின் தட்பவெட்ப நிலையே அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கத்தைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி. எடுத்துக் காட்டாக அமெரிக்கா, கனடா போன்ற குளிரான பகுதிகளில் தயிர் பயன்பாட்டில் இல்லை காரணம் குளிர் பாக்டீரியாவின் வளர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்தும் அதனால் அவர்கள் அதிகம் சீஸ் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம்மைப் போன்ற வெப்பப் பகுதிகளில் பெரும்பாலும் தயிர் உணவின் முக்கிய பகுதியாய் இருக்கும் காரணம் வெப்பம் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ஒரு இனக்குழுவின் உணவுக்கு கலாச்சாரமே அவர்களின் நாகரிக வளர்ச்சிப் பாதையின் தொடர்புச் சங்கிலி. ஒரு இனக்குழு தனது நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்கிறது. பின்பு தங்களின் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் உணவுப் பழக்கங்களும் பரிணாம வளர்ச்சி பெற்று உணவே மருந்து எனும் நிலையை நோக்கி நகர்கிறது. தேங்காய், நொங்கு, பதநீர், தேன் போன்ற இயற்கை உணவுகளே நமது உணவுக்கு கலாச்சாரத்தின் துவக்கம். பின்பு நிலத்தைப் பக்குவப படுத்தி படிப்படியாக உணவின் அடுத்த படி நிலைக்கு தங்களை நகர்த்திக் கொண்டனர் தமிழர்கள்.

எந்த ஒரு இனக்குழு தங்களுக்கு தேவையான சர்க்கரைக்கான தேவைகளை உணர்ந்து அதற்கான வழிமுறைகளைக் கண்டதோ அவை அனைத்தும் நாகரிக வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலைக் கண்டன. அவ்வகையில் தேனிலிருந்து நகர்ந்து கருப்பட்டியைத் தங்களின் உணவின் தேவைக்காக முதன்முதலில் தமிழர்கள் பயன்படுத்தத் துவங்கியதே உலகின் முதல் நாகரிக மேம்பாடு. அறிவியலோ அல்லது அனுபவமோ, ஒரு அறிவுசார் இனக்குழுவினாலேயே இது சாத்திய படும்.

இப்படி உலகின் தலை சிறந்த உணவுக்கு கலாச்சாரத்தையும், தொடர்ச்சியையும் கொண்டுள்ள தமிழர்கள் இன்றுவரை அதனை அறிவியல் பூர்வமாக ஆவணப் படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. வைன், பிரெட் போன்றவற்றிற்கு உள்ள ஆவணங்களில் நூறில் ஒரு பங்கு கூட கல், பதநீர், புட்டு போன்றவற்றிற்கு இல்லை. இவற்றை ஆவணப் படுத்தும் முதல் முயற்சியின் துவக்கமே இந்த “தமிழர் உணவின் அறிவியல்” தொடரின் நோக்கம்.

இதன் துவக்கமாக நமது உணவுக்கு கலாச்சார வளர்ச்சியின் முதல் வித்தான கருப்பட்டியின் ஆச்சர்யமான அறிவியல் தகவல்கள் பற்றி அடுத்த வாரம் காணலாம்.

இத்தொடருக்காக அறிவியல் ரீதியான தகவல்களைத் தந்து உதவும் அமெரிக்கா வாழ் விஞ்ஞானி திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களுக்கு netivespecial.com இன் நன்றிகள்.

அடுத்த பகுதி – Healthy Karuppati
Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”. SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Error: Contact form not found.

தமிழர்திருநாளாம் தைபொங்கல்

தமிழர்திருநாளாம் தைபொங்கல் :-

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி” என்ற தனி சிறப்புக்குரியது தமிழ் சமூகம்.இன்று பல அறிவியல் அறிஞர்கள் நிரூபணம் செய்யும் பல உண்மைகளை அன்றே தமிழன் பயன்படுத்தி உள்ளான்.அவனின் அறிவும் ஆற்றலும் அவ்வளவு நுண்ணியமாக இருந்தது.அவனின் ஒவ்வொரு செயல்களுக்கும் பின்னால் ஒரு மருத்துவ பின்னனி காரணம் இருந்தது,இது அவன் நீண்ட ஆயுளோடு வாழ வழி வகுத்தது.தமிழர்கள் என்றாலே பண்டிகளுக்கு பஞ்சம் இருக்காது.விழாக்களை கொண்டாடுவதில் தமிழர்களுக்கு நிகரானவர் உலகில் யாவரும் இல்லை.அதே போல்அவர்கள் கொண்டாடும் அணைத்து பண்டிகைகளுக்கும் ஒரு பின்னணி காரணம் இருக்கும். அவ்வாறு தமிழர் பண்டிகையில் முக்கிய ஒன்றான பொங்கல் பண்டிகையின் சிறப்பு, கொண்டாட உண்மையான காரணம் என்ன?என பொங்கல் பற்றிய சுவாரசிய தகவல்களை காண்போம்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி” :-

போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். போகி பண்டிகை என்றாலே வீட்டில் உள்ள பழையனவற்றை தீயிட்டு கொளுத்துவது மட்டுமே என்று இன்றைய தலைமுறையினர் தவறாக அறிந்துள்ளனர்.ஏன் கொண்டாடுகிறோம் என்பதன் காரணம் யாரும் அறிந்திருப்பது இல்லை.

உண்மையில் போகி பண்டிகையின் முக்கிய நோக்கம் தூய்மையை பேணிக்காப்பது தான்.ஆச்சரியமாக இருக்கிறதா! ஆம் நாம் இன்று அதற்கு மாறாக தான் கொண்டாடி வருகிறோம்.பருவ நிலைமாற்றங்களின் அடிப்படையில் ஒரு வருடத்தை தமிழன் இரண்டாக பிரித்தான்.ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தென் கிழக்கு பகுதியில் சூரியன் உதிக்கிறது.அதன் பிறகு வடகிழக்கு பகுதியில் சூரியன் உதிக்கிறது.இதனால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தினால் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவே தூய்மையை பேணி கொண்டாடும் நாளாக போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.தூய்மையை பேண கொண்டாடப்பட்ட போகி பண்டிகை இன்று முற்றிலும் மாறாக காற்றை மாசுபடுத்துவதாக மாறிவிட்டது. வாழக்கூடிய குடிருப்புகளையும் மேலும் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்தால் மட்டும் போதாது.உடலின் அகத்தையும் தூய்மையாக பேண வேண்டும் என்பதற்காக கொண்டாடப்படும் ஒன்று.

காப்பு கட்டுதல்:-

வீட்டின் சுத்தம் கருதி மக்கள் வண்ணம் பூசுவார்கள்.வீட்டின் சுத்தம் போல தங்களின் அக உடலை சுத்தம் செய்யவே வீட்டில் காப்பு கட்டபடுகிறது.காப்பு கட்டுவதற்கு கிருமி நாசினியாக இருக்கும் வேப்பிலை,ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய ஆவாரம் பூ ,சிறுநீரகத்தை சுத்தப்படுத்தக்கூடிய பூவாரப்பூ என்ற சிறுபீழை இந்த மூன்று மூலிகை கொண்டு காப்பு வீட்டின் முற்றத்தில் கட்டப்படுகிறது.இந்த மூன்று மூலிகைகளின் நற்குணங்களை மக்கள் அறிந்திட வேண்டும் என்பதற்காக கண்களில் படும்படி வீட்டின் முற்றத்தில் கட்டப்படுவதாக சித்த மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தை பொங்கல் திருநாள்:-

பொங்கல், தமிழர்களின் மிக சிறப்பான கொண்டாட்ட பண்டிகைகளுள் ஒன்று.அன்றைய தினம் எண்ணெய் குளியல்,புத்தாடை ,கரும்பு,சக்கரை பொங்கல்,விளையாட்டுப்போட்டிகள் என எத்தனை மகிழ்ச்சியும்,கொண்டாட்டமும் நிறைந்து காணப்படும் .ஒரு நிமிடம், உங்களில் ஒருவரை ஏன் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம்? என்றால் நம்மில் பலரது கருத்து, வழிவழியாக கொண்டாடுவதினால் கடைபிடிக்கிறோம் என்பதாகவும்,மேலும் பலர் உழவர் திருநாள் என்பதால் பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம் என்றும் கூறுவர்.உண்மை பின்னணி பற்றி காண்போமா!

உண்மையில் பொங்கல் சங்க காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது,வேறு பெயர்களை கொண்டு.தற்போதய பொங்கல் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.தனது உழைப்பிற்கு உதவிய கால்நடைகளுக்கும் உறுதுணையாக இருந்த இயற்கைக்கும் நன்றி சொல்லும் விதமாக உழவர்களால் கொண்டப்படும் ஒரு விழாவென பொங்கல் அமைகிறது.ஆனால் இதன் முக்கிய நோக்கம் அதுவல்ல.தமிழர்கள் இயற்கையை கடவுளாக வழிபட்டனர்.அது மரமாகட்டும்,அல்லது உழவுக்கு உதவிய கால்நடைகளாகட்டும் அந்த மரியாதையின் நிமித்தம் தான் இந்த ஜல்லிக்கட்டும் கூட .கால்நடைகளையும், இயற்கையையும் ஆராதிக்கும் தமிழர்கள் இதனை விழாவாக கொண்டாடும் வழக்கம் சங்க காலத்திலிருந்து வந்துள்ளது.

முதலில் பொங்கல் சந்திரனை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டது.சந்திரனின் வளர்ச்சியை அடிப்படியாக கொண்டு தான் முதலில் நாட்கள் கணக்கிடப்பட்டது.அதன் பின்தான் சூரியனின் நகர்வினை அடிப்படையாக கொண்டு நாட்கள் கணக்கிடப்பட்டது.சந்திரனை அடிப்படையாக கொண்ட கணக்கீட்டிற்கு “சந்திரமானம்” என்றும் சூரியனை அடிப்படையாக கொண்ட கணக்கீட்டிற்கு “சௌரவமானம்” என்றும் பெயர்.

பூசநட்சத்திரத்தில் முழுநிலா வருவது தான் தைபூசம்.சங்க இலக்கியங்களில் “தைஇதயதிங்கள்” என தை மாதம் குறிப்பிடபடுகிறது. தைபூச முழுநிலா நாளில்”‘நீர்வூரும்” என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.தையில் நீர்வளம் பெருகி உணவு உற்பத்தி அதிகரித்து நாடு நலமும், வளமும் பெற நோன்பு நோற்பது தான் “தைநீராடல் “.பூரணிமாத கணக்கின்படி மார்கழி மாத பௌர்ணமியில் தொடங்கி தைபௌர்ணமியில் அதாவது தைப்பூசம் அன்று இந்த விரதம் முடிவடையும்.தைப்பூசத்தை கொண்டாட்டத்திலிருந்தே பொங்கல் கொண்டாட்டம் வந்தது.இதனை உறுதிபடுத்தும் விதமாக

சம்பந்தர் தன் மயிலாப்பூர் பதிகத்தில் ,

“நெய்பூசும் ,பொன்புழுக்கள் நேரிழையார்க்

கொண்டாடும் தைப்பூசம் “

என சுட்டுகிறார்.எனவே சங்ககாலத்தில் “புழுக்கள்” என்று பொங்கலை குறிப்பிட்டுள்ளதை நாம் காணலாம் ,இதனைக்கொண்டே நாம் புழுங்கல் அரிசி என வழக்கத்தில் உள்ள அரிசியினை கூறுகிறோம்.20ம் நூற்றாண்டில் தென் நகரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் முதன் முதலாக வாழ்த்து அட்டையை அச்சிட்டார்.அதன் மூலமே தைபொங்கலுக்கு உழவர் திருநாள் என பெயர்வந்தது.ஐரோப்பியர்களின் வருகையும் நம் அன்றாட நடவடிக்கைகளும் சேர்ந்து ஆங்கில காலண்டர்களின் கணக்கீட்டின் படி ஆங்கிலத்தில் தேதிகள் அடைய நேர்ந்தது.

மாட்டுப்பொங்கல் :-

தை பொங்கலின் மறுநாள் மாட்டுப்பொங்கல் . தங்களுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி செய்யும் விதமாக கொண்டாடப்படும் ஒன்று.பின்னணி காரணங்கள் என்று ஏதும் இல்லை நம்மால் வழக்கத்தில் கொண்டுவரப்பட்டது.

ஜல்லிக்கட்டு :-

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதானவீர விளையாட்டு.

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில்உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.

காணும் பொங்கல் ;-

காணும் பொங்கல் என்பது நம் உறவினர்களிடையே ஏற்பட்ட பகையுணர்களை நீக்க அவர்களோடு ஒற்றுமையாக இருக்கவேண்டி நாமாக ஏற்படுத்திக்கொண்ட ஒன்று.அந்த நாளில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று மாமிசம் சமைத்து சாப்பிடுவது என்பது நல்ல பாசப்பிணைப்பினை ஏற்படுத்தும்.

இவ்வாறென விமர்சையாக கொண்டாடப்படும் பொங்கலின் போது கண்டிப்பாக தின்பண்டங்களுக்கு பஞ்சமகா இருக்காது.அன்றிருந்த காலங்களில் வீட்டில் இருக்கும் பாட்டிகள் பல பலகாரங்களை நமக்கு செய்து தருவார்கள். ஆனால் தற்போது உள்ளநகர வாழ்க்கையில் குழந்தைகள் பல வண்ணவிளம்பரங்களின் ஈர்ப்பினால் பைகளுக்குள் அடைக்கப்பட்ட வேதிப்பொருட்களை உண்ணுகின்றனர்.இதனால் பண்டிகை அதுவுமாக நோய்வாய்படும் அபாயம் உள்ளது.மேலும் இப்போதுள்ள நகர வாழ்க்கையில் நம்மால் நேரம் ஒதுக்கி நம் குழந்தைகளுக்காக பண்டங்களும் செய்து தர இயலவில்லை.

இந்த கவலையை பூர்த்தி செய்யும் விதமாக முற்பட்டுள்ளனர் நேட்டிவ் ஸ்பெஷல் நிறுவனத்தினர்.அழிந்து விட்ட நம் பாரம்பரிய பண்டங்களை மீட்டெடுக்கும் விதமாக அதனை அழியாமல் அனைவரின் பயன்பாட்டிற்கு கொண்டுவர செயல்பட்டுவரும் இணையதள நிறுவனம் தான் நேட்டிவ் ஸ்பெஷல்.தற்போதுள்ள தொழில்நுட்ப உதவிகளோடு நம் பாரம்பரிய பண்டங்களான எள்ளு உருண்டை பொட்டுக்கடலை உருண்டை,அதிரசம்,கருப்பட்டி மைசூர்பாக்கு,ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா,இனிப்பு சீடை ,கார மிச்சர்,சாத்தூர் சேவு,சின்ன வெங்காய முறுக்கு என நமது பாரம்பரிய பண்டங்களை வழங்கி வருகின்றனர் இணையத்தளம் மூலம்.

பொங்கலின் கரும்போடு நமது பாரம்பரிய தின்பண்டங்களும் இருக்க விரும்பினால் ஆர்டர் செய்யுங்கள் நேட்டிவ் ஸ்பெஷல்.காம் .பொங்கலை முன்னிட்டு பல காம்போ சலுகைகளும் உண்டு.இந்த பொங்கல் இனிய பொங்கலாக அமையட்டும் நம் பாரம்பரிய பண்டங்களோடு!

நன்றி!!

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

முருங்கை இலையின் மகத்துவம்

நாம் தினமும் காணும் முருங்கையின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். உடம்பில் அதிகம் சேர்க்கப் படாத ஆனால் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய கசப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளில் ஒன்றான கசப்பு சுவையுடன் மிகுந்த உடல் நலன்களைத் தர வல்லது. “Moringa” என்று இணையத்தில் தேடினால் குடுவையில் அடைத்து 1000 முதல் 10000 ரூபாய் வரை வெளிநாடுகளில் விற்கப்படுகிறது இந்த முருங்கை இலை பொடி. உலகின் மிகச் சிறந்த தலைவரான பிடல் காஸ்ட்ரோ அவர்கள் இதன் அருமை உணர்ந்து “Magic Tree” என்று பெயரிட்டு இதனை கியூபாவில் விளைவித்து மக்களுக்கு வழங்க வழி செய்தார். இப்படி உலகமெல்லாம் போற்றப் படும் முருங்கை இலை அதிகமாக நமது உணவில் நாம் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் தினசரி இதனை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம். இரண்டு தனித் தனி ஆராய்ச்சிகளின் முடிவுகள் கீழே,

1) 30 பெண்களைக் கொண்டு செய்யப் பட்ட ஒரு ஆராய்ச்சியில். தினசரி 7 கிராம் (ஒரு ஸ்பூன்) முருங்கை இல்லை பொடி தொடர்ந்து மூன்று மாதம் எடுத்தவர்களுக்கு சராசரியாக 13.5% சக்கரை குறைந்திருந்தது.

2) 6 நபர்களை வைத்து செய்யப் பட்ட மற்றொரு ஆராய்ச்சியில் 50 கிராம் அளவு முருங்கை இல்லை சேர்த்த பொழுது ஒரே வேளையில் 21% சக்கரை குறைந்தது இது மட்டும் இன்றி உடல் கொழுப்பினைக் கரைக்கக் கூடியது, ஆர்சனிக் விஷத்தை நீக்க வல்லது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இத்தகைய சிறப்புடைய முருங்கை இலைப் பொடி சரியான முறையில் தயார் செய்து கிடைப்பதுதான் அரிதாக உள்ளது. பாரம்பரியமான ஊஞ்சங் காட்டுத் தோட்டத்தில் இதனை இப்பொழுது செய்கிறார்கள். முப்பது வருடத்திற்கு மேல் பழமையான மரங்களின் இலைகளை நிழலில் காய வைத்து ருசிக்காக பார்மபரிய முறையில் கடலைப் பருப்பு, வர மிளகாய் சேர்க்கப் பட்டு மிகவும் சுவையாக தயாரிக்கப் படுகிறது. இதை தோசை இட்லி மற்றும் அரிசி சோறுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Order Now @https://nativespecial.com/sg/product/murungai-keerai-rasam-podi-/
Delivery within 3 to 5 days including free shipping.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Udal Soodu Thaniya in Tamil

வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவு முறை மாற்றங்கள் என அனைத்தும் நமது உடல் வெப்பத்தை அதிகரித்து அதனால் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. அதிகப்படியான உடல் சூடு உடல் சோர்வு, தொடர்ச்சியான சளி, காய்ச்சல்,தைராய்டு என பல உடல் சிக்கல்களைக் தோற்றுவிக்க அடிப்படைக் காரணம். எனவே உடல் சூட்டினை மிகாமல் காப்பது ஆரோக்கியத்திற்கு அதிமுக்கியம்.

மோர், இளநீர், நல்லெண்ணைக் குளியல் என நாம் அறிந்த வழிகள் நிறைய இருந்தாலும் இவை அனைத்தும் உடலின் சூட்டினை வேகமாகக் குறைப்பதால் அனைவருக்கும் ஏற்ற வழிமுறையாக இவை இருப்பதில்லை. இவற்றை விட மிகச் சரியான, எளிமையான வழிமுறை நம் பாரம்பரியமாக வந்திருக்கிறது. பழனியில் நவபாசான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த உணவினையும் அளித்துள்ளார். ஆம், மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம். காலையிலும் மாலையிலும் ஒரு சிட்டிகை பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும் உடல் சூடு கட்டுக்குள் வைக்கப் படும், மேலும் அதீத ஆரோக்கியமானதும் கூட. காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது பஞ்சாமிர்தம், கிருமித் தொற்றாக இல்லாமல் உடல் சூட்டினால் வரும் காய்ச்சலுக்கு நேரடி நிவாரணம் பஞ்சாமிர்தம்.

இவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றிக் கூறாக காரணம் இன்றும் பழநியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம். பங்குனியில் துவங்கும் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கவே வழி வழியாக இந்தப் பயன்பாடு இருந்து வந்துள்ளது.

இவ்வளவு அறிய பண்டமான பஞ்சாமிர்தம் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். பழனி மலையில் கிடைக்கும் பஞ்சாமிர்தம் கூட மலை வாழையில் செய்யப் படுவதில்லை. தேவை அதிகரித்ததற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை என்பதால் வேறு பழங்கள் வைத்து செய்யப் படுகின்றது. அதனால் 15 நாட்களில் இவை கெட்டு விடுகிறது. மேலும் தனது மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது. ஆனால் மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.

தீவிர தேடலுக்குப் பின் நேட்டிவ்ஸ்பெஷல் குழு சிறப்பான முறையில் மலை வாழை இட்டு பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் செய்யும் ஒருவரை அறிந்து இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் அதனை இணைத்துள்ளோம். தகுந்த பொருட்கள் கிடைக்குமானால் பஞ்சாமிர்தம் வீட்டிலேயே செய்வது எளிது, இல்லாத படிக்கு நேட்டிவ்ஸ்பெஷல் இணைத்தில் ஆர்டர் செய்து அடுத்த நாளே வீட்டில் பெறலாம்.

தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆயிரம் உணவுப் பண்டங்கள், பானங்கள் இருந்தும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே அமிர்தம் என்ற பெயர் வழங்கப் படுகிறது. இதுவே இதை விடச் சிறந்த சுவையும், மருத்துவ குணமும் கொண்ட பொருள் வேறில்லை என்பதற்கான சான்று.

NativeSpecial.com/sg/ – Home for authentic traditional traditional eateries

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

நாட்டு மாட்டுப் பாலும் நம் உடல் நலனும்

”நாட்டு மாட்டுப் பாலும் நம் உடல் நலனும்”

This article is based on a Mother’s personal experience

1) குழந்தைகளுக்குப் பால்தான் முதன்மை உணவு என்று உறுதியாக நம்பி இருந்த எனக்கு அதுதான் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் கோளாறுகளுக்கான முக்கிய காரணி என்று உணர வைத்தது எனது இரண்டு சொந்த அனுபவங்கள். எங்கள் முதல் குழந்தைக்கு நாட்டு மாட்டுப் பால் எளிதாக கிடைத்தது எனவே கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நட்டு மாட்டுப் பால் மட்டுமே கொடுத்து வந்தோம்.
2) எப்போதாவது ஒரு முறை வரும் சளியைத் தவிர வேறு எந்த உடல் கோளாறும் வந்ததில்லை, மருத்துவமனை செல்லும் அவசியமும் ஏற்ப்பட்டதில்லை. ஆனால் எங்கள் இரண்டாவது குழந்தைக்கு நாட்டு மாட்டுப் பால் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் பாக்கெட் பால் கொடுக்கத் துவங்கினோம்…..
3) இருவரும் பாக்கெட் பால் குடிக்க துவங்கிய சில நாட்களில் தொடர்ந்து, சளி, இருமல் வரத் துவங்கியது. முதலில் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டு வைத்தியமாக மிளகு, மஞ்சள் என அனைத்தையும் பாலில் கலந்து கொடுத்துப் பார்த்தோம். ஆனால் சளி, இருமல் அதிகம் ஆகியதே தவிர குறையும் படியாக இல்லை.
4) தொடர்ச்சியான சளி, இருமல் ஆகியவை குழந்தைகளின் தினசரி நடவடிக்கைகளை பாதிக்கத் துவங்கியது, உணவு உண்ணுதல் குறைந்தது. பிறகு அலோபதி, சித்தா, ஹோமியோபதி என எல்லா மருந்துகளும் முயற்சித்தும் பலன் இல்லை. பிறகு ஒரு சித்த மருத்துவர் பாலை நிறுத்தி பாருங்கள் என்று கூறினார்.
5) முதலில் அது எனக்கு முட்டாள்த்தனமாகத்தான் தோன்றியது. குழந்தைக்கு பாலை நிறுத்தினால் எப்படி என்று, ஆனால் வேறு எந்த வழியும் புலப்பாடாததால் இறுதியில் அதனையும் முயற்சி செய்தோம். பாலினை நிறுத்திய அடுத்த இரண்டு நாட்களில் இருமல் குறைந்தது, சளியும் படிப் படியாக குறையத் துவங்கியது. அதன் பின் மிகவும் சிரமப்பட்டு நட்டு மாட்டுப் பால் வாங்கி கொடுக்க ஆரம்பித்தோம். இப்பொழுது சுத்தமாக சளி, இருமல் சிக்கல் இல்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் அலுவல் விடயமாக சென்னை சென்ற பொழுது ஒரே ஒரு நாள் இரண்டாவது குழந்தைக்கு சிந்து மாட்டுப் பால் கொடுத்தோம்.

6) அடுத்த நாளில் இருந்து வாந்தியும், வயிற்றோட்டமும் துவங்கியது. மருத்துவரிடம் சென்றால் உடனே பாலை நிறுத்துங்கள், இது போல் அதிகப்படியான குழந்தைகள் வருகிறார்கள் என்கிறார்.இரண்டுநாள் மருத்துவமனையில் இருந்து பிறகு தான் வீடு வந்து சேர்ந்தோம். எனவே வேறு வழியில்லாத சந்தர்ப்பங்களில் ஓரிரு நாட்கள் பவுடர் பால் கொடுப்பது கூட பரவா இல்லை. பவுடர் பால் தொடர்ச்சியாக கொடுப்பது கூடாது என்றாலும் தவிர்க்க முடியாத சூழலில் சிந்து/ஜெர்சி மாட்டுப்பால் கொடுப்பதற்கு பதிலாக பவுடர் பால் கொடுப்பதே நலம்.
7) இத்தனை அனுபவங்களின் பிறகு இப்பொழுது பெரியவன் வளர்ந்து விட்டதால் அவனுக்கு முற்றிலுமாக பாலை நிறுத்தி விட்டு அனைத்து சத்துக்கள் நிறைந்த நம்ம ஊர் கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், தேங்கா மிட்டாய்,அத்திப்பழம் ஆகியவற்றை தொடர்ந்து கொடுத்து வருகிறோம். இப்பொழுது குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள். இரண்டாவது குழந்தை இன்னும் இவைகளை உட்கொள்ளும் அளவுக்கு வளராததால் அதிக செலவு செய்து இரண்டாவது குழந்தைக்கு மட்டும் நாட்டுப் மாட்டுப் பால் வாங்கித் தருகிறோம்.நீங்களும் பாலினைத் தொடர்ந்து உட்கொள்வதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. …
8) அங்கு, இங்கு என ஓடி பெற்ற அனுபவத்தின் வாயிலாக கடைசியில் நம்ம ஊர் பாலும், நம்ம ஊர் பண்டங்களுமே சிறந்தது என்று உணர வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். மீண்டும் நமது அடிப்படைக்குத் திரும்புவோம். நம்ம ஊர் பாரம்பரிய தரம் குறையாத பண்டங்கள் https://nativespecial.com இணையத்தில். Quality Guaranteed !

Order Now : கடலை மிட்டாய் :https://nativespecial.com/product/kovilpatti-kadalai-mittai-peanut-candy/

Order Now : எள்ளு மிட்டாய்https://nativespecial.com/product/kovilpatti-ellu-mittai-sesame-seed-candy/

Order Now : தேங்கா மிட்டாய் :  https://nativespecial.com/product/coconut-burfi-online/

Free Shipping & Two Days Home Delivery

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

 

துவர்ப்பு | தமிழர் உணவின் அறிவியல் – பகுதி 7

முந்தைய பகுதி – Science in bitterness food

அறுசுவைப் பட்டியலில் அதிகம் பேசப்படாத சுவை துவர்ப்பு. பெரும்பாலும் கனியாத கனிகளை அறிய துவர்ப்பு சுவை பயன்படுகிறது. துவர்ப்பு சுவைக்குள்ள ஒரு தனிச் சிறப்பு யாதெனில், நமது நாவிலும், உணவுக் குழாயிலும் உள்ள செதில் துவாரங்களைத் திறந்து மூடச் செய்து உணவுப் பாதையை சுத்தம் செய்து விடும். வேறெந்த சுவைக்கும் இல்லாத இந்த சிறப்பு துவர்ப்பிற்கு மட்டுமே உரியதாகும்.


டேனின் (Tanin) எனும் ரசாயனம் தான் துவர்ப்பு சுவைக்கான காரணம். மரப்பட்டை, கனிகளின் தோள் என தாவரங்களை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பது இந்தத் துவர்ப்பு சுவை தரும் டேனின் தான். எனவே தான் துவர்ப்பு சுவை மிகுந்த காய்களை பூச்சிகள் அதிகம் தாக்குவத்தில்லை. எடுத்துக்காட்டாக சேனைக் கிழங்குகள் பூச்சித் தாக்குதலுக்கு ஆட்படுவதே இல்லை. எனவே வறட்சி காலங்களிலும், பூச்சித் தோற்று காலங்களிலும் உணவுக்கான பொருளாக, துவர்ப்பு சுவை மிகுந்த சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, போன்ற காய் வகைகள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டது.

இந்த டேனின் அதிகம் உள்ள உணவினைச் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டு விடும், எனவே தான் துவர்ப்பு சுவை மிகுந்த அனைத்து காய் வகைகளும் தமிழர் சமையல் முறையில் முதலில் நீரில் வேக வைக்கப் பட்டு பிறகு சமைக்கப் பட்டன. நீரில் வேகும் பொழுது டேனின் பிரிந்து விடுவதால் துவர்ப்பு சுவை குறைந்து உண்பதற்கு ஏற்ற சுவை பெறுகிறது.


இவ்வாறு தமது நிலப்பரப்பில் கிடைக்கப் பெரும் பொருட்களைக் கொண்டு அதன் தன்மைக்கு ஏற்ப சமைத்து உண்ணும் வழிமுறைகளை பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே கைக்கொண்டிருந்தது தமிழ்ச் சமூகம்.

அதீத துவர்ப்பினைக் கொண்ட நாவல் பழத்தினைச் சுவைக்க வந்த ஒளவை “சுட்ட பழம் வேண்டுமா” எனும் கூற்றில் தமிழ் கடவுள் முருகனிடம் தோல்வியுற்றதை எண்ணி வெட்க்கி ஒளவையார் பாடிய பாடல்,

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் – பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

அதே போல் அதிக துவர்ப்பினைக் கொண்ட இன்னொரு கனியான நெல்லிக் கனியை அதியமானுக்கு வழங்கிய வரலாறும் நமது இலக்கியத்தில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே குறிப்பிடப்பட்டிருப்பது, துவர்ப்பு முதற் கொண்டு அனைத்து சுவைகளையும் பகுத்து உணவுக் கலாச்சாரத்தின் உச்சானிக் கொம்பில் வாழ்ந்து வந்த சமூகமாக நாம் திகழ்ந்துள்ளோம் என்பதற்கான சான்றாகும்.

இனிப்பு, கசப்பு, புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என அறுசுவைகளின் அடிப்படை அறிந்து அதனைத் தமிழர்கள் எவ்வாறு தமது உணவு முறையில் பயன்படுத்தி வந்தனர் என்பதை கடந்த இதுவரை வெளிவந்த பகுதிகளில் பார்த்தோம். இனி வரும் பகுதிகளில் நமது சமையல் முறையையும் அதன் பின்னிருக்கும் அறிவியலைப் பற்றியும் காணலாம்.

நம்ம ஊர் சுவை மிகுந்த பண்டங்களை தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Native Breed (Nattu Madu paal) milk that cures Cold on Kids

This article is not based on the medical facts but based on a Mother’s personal experience gained while bringing up her kids.

Two instances that made myself and my husband realize milk is the very source of cold, cough and other health issues for the children. When we had our first baby we provided cow milk from our native breed (Nattu madu pal – A2 Milk) until he was 2 years old. He was very healthy and no instances of frequent cold or cough. But for the younger one as the native breed (Nattu Madu pal – A2 milk) was not available we end up giving packet milk which is from Jersey cow. In two months time both of our kids started having freqent instances of cough and cold.

Initially we thought Cold is something usual for kids and no need of any medicines to suppress it. So we just continued with our natural remedies like Pepper in milk, Manjal, Thulasi, etc., But the situation got worser day by day. Cough and cold became a regular thing which inturn affected their daily routine and food intake. Then we started medications ranging from allopathy, homeopathy, Siddha, etc., but none of the medications worked out. One of the Siddha doctor adviced us to stop milk for some time. As we thought Milk is the main source of energy for kids we are very skeptical about stopping the milk for kids. But as we tried out all other options without success, we thought of trying this too. To our surprise once we stopped the milk the cold and cough gradually decreased and now there are no occurences of it. Then, after a long search we got Native Breed milk (Nattu Madu pal – A2 milk) and started giving it. It did not cause any health issues for our kids so far.

On another instance when we were on a trip to Chennai we gave Jersey milk for one day to our younger one and she got diarreiah on the next day. When we went to doctor they told to stop the milk immediately and informed that they are seeing so many cases with the same complaint in recent years. So we stopped the milk and we were in bed for three days, as per the doctor’s advice we provided only powder milk. So on situations were there is no other go but milk is the only option its better to try powder milk rather than the packet or Jersey milk. Though it is not advicable to give powder milk as a regular intake it can be a stop gap arrangement for your kids.

So with all these experience now we stopped milk for our older one and giving him other healthy snacks like Kadalai Mittai, Ellu Mittai, Thenga Mittai, Athippazham, Coconut milk, etc., As the younger one is too young to discontinue milk we are getting Native Breed Milk (Nattu Madu pal – A2 milk) for her alone. We ourselves also stopped consuming the milk on a regular basis.

Its right time to understand the impact of moving away from our native products and we should start getting back to our traditional food habits.

Buy authentic traditional snacks at https://nativespecial.com.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Kadalai Mittai Benefits in Tamil

அதிக அளவு சத்துக்களைக் கொண்ட கடலை மிட்டாய் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உகந்தது. கடலை புரதச் சத்தினை அதிகளவு கொண்டது. அனைத்து பருப்பு வகைகளிலும் புரதம் நிறைந்திருந்தாலும் அவற்றில் கூடவே பித்தமும் சேர்ந்து கொள்வதால் தொடர்ச்சியாக உண்ணும் பொழுது பிற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காலையில் பித்தம் அதிகமாக இருந்த போதும் அதனுடன் வெள்ளம் சேர்க்கப் படும் பொழுது கடலைக் கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்து விடுகிறது. இதுதான் கடலை மிட்டாயின் அனைத்து நன்மைகளுக்குமான அடிப்படை. வெள்ளத்தின் சேர்ப்பில் பித்தம் சீர் செய்யப் படுவதால் தொடர்ச்சியாக கடலை மிட்டாயை உண்பதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே கடலையும், வெள்ளமும் சேர்ந்து அதி புரதம், இரும்பு, செலினியம் சத்துக்களைக் கொண்ட ஒரு சிறந்த பண்டமாக உருப்பெறுகிறது. கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை விட குழந்தைகளுக்கு சிறந்த இனிப்புப் பண்டம் வேறு இல்லை.

கடலை மிட்டாயின் சிறப்புகள்:
1) அதிக புரதச் சத்து
2) கடலையின் பித்த குணத்தினை சரி செய்யும் வெள்ளத்தின் சேர்க்கை
3) அதிக இரும்பு மற்றும் செலினியம் சத்துக்கள்
4) தசைகளை உறுதியாக்குவது – குறிப்பாக குழந்தைகளுக்கு
5) அதிக புரதம் உடம்பின் சக்கரை அளவினைக் கட்டுப்படுத்தும்
6) மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது – குறிப்பாக குழந்தைகளுக்கு
7) மற்ற குழந்தைகள் முட்டைகளில் இருப்பது போல் எந்தக் கெட்ட கொழுப்பும் அற்றது

நல்ல கடலை மிட்டாய் எங்கு கிடைக்கும்:
கடலை மிட்டாய் மிகச் சிறந்த குண நலன்களைக் கொண்டிருந்தாலும் நல்ல தரமான கடலை மிட்டாய் கிடைப்பதுதான் இன்றைக்கு சிரமமான காரியம். அனைத்து தெருக் கடைகளிலும் கிடைத்தாலும் அவை தரமானதாக இருப்பதில்லை. இன்றைய நிலையில் திண்டுக்கல் தங்கமணி மற்றும் கோவில்பட்டியில் மட்டுமே தரமான கடலை மிட்டாய்கள் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட நூறு வருடங்களாக அதிக தரமான கடலை மிட்டாய்களை இவர்கள் செய்து வருகிறார்கள். இணைய உலகில் இன்று தங்கமணி மற்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய்களை இப்பொழுது நாம் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (www.nativespecial.com) இணையதளத்தில் ஆர்டர் செய்து வீட்டில் இருந்தே சுவைக்கலாம்.

கடலை மிட்டாயின் சிறப்புகக்களையும் நமது குழந்தைகளுக்கு ஏன் தினமும் தர வேண்டும் என்பதையும் மருத்துவர் திரு. சிவராமன் அவர்கள் விளக்கும் இந்த காணொளியைப் பாருங்கள்.

 https://www.youtube.com/watch?v=-iQVh7UkVmE(Video is in Tamil)

NativeSpecial.com delivers both Kovilpatti and Dindigul Thangamani kadalai mittai to your door steps.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

5 Reasons why Kadalai Mittai should be part of your daily diet

As we all know Mahatma Gandhi’s most staple diet was Peanuts (Kadalai) and Goat Milk. There is a reason why Gandhiji had given high importance to Peanuts (Kadalai) on his diet. Let us see what three Peanut candies (kadalai Mittai) a day can do to your metabolism,


1) For Pregnant Women – Folic acid in KadalaiMittai (Peanut chikki) reduces serious neural tube defects in the fetus by up to 70%. Eating peanuts during pregnancy can decrease the risk of allergic diseases like asthma in newborns.

2) For Kids – High levels of Vitamin B3 or Niacin content aid brain function and boosts memory power for kids. Fatty acids provide excellent nutrition for nerve cells in the brain. Additionally, a flavonoid called Resveratrol helps improve blood flow to the brain significantly.

3) For Growing Children – Peanuts are a good source of protein and amino acids, providing rich energy needed by active growing children for overall body development.

4) Mineral Content – Kadalai Mittai has highest mineral source which includes Potassium, manganese, copper, calcium, magnesium, iron, selenium, and zinc

5) Cholestrol Regulation – The monounsaturated fatty acids, especially Oleic acid, present in peanuts, help lower bad cholesterol and increasing good cholesterol in the body. Copper also assists in the body’s defense against coronary diseases.

Kadalai Mittai or Peanut chikki is the most effective way to intake peanuts because the Jaggery (Vellam) suppresses the negative effects of consuming peanuts.

All these benefits shows the importance of KadalaiMittai and why it should be on our daily intake list. If your execuse is that Kadalai Mittai is not hygienic or quality Kadalai mittai is not available then you can always get it through https://nativespecial.com where you can get high quality Kadalai mittai from Kovilpatti and Dindigul. Its high time to reduce chocolate, chips intake and get back to our traditional eateries for our kids.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Kadalai Mittai Health Benefits

இந்த கட்டுரையைத் தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும்

Kadalai mittai or peanut candy in english is the most nutritious snack for both kids and elders. As we all know peanut or Kadalai is a very rich source of protein. Any nuts for that matter is rich protein source. But the issue lies in their accumulation of pitham. With more intake of nuts our body pitham will start increasing which leads to imbalance in our body and cause various diseases. As jaggery or vellam (in tamil) can suppress the pitham kadalai mittai becomes a perfect protein source with no side effects. Kadalaimittai or peanut candy from Tamil nadu are made of kadalai (peanut) and Jaggery. So with this combination Kadalai Mittai becomes a candy with high Protein, Iron and Selenium content. Also it did not have any bad fat at all. There is no other better snack than kadalai mittai for your kids.

Kadalai mittai benefits:
1) Rich source of protein

2) Usual high pitham issues on nuts is addressed directly by the addition of Jaggery

3) High iron and selenium content

4) Help reducing fat accumulation and Belly (Thoppai) – thoppai kuraiya valigal

5) Protein content helps in building strong muscles – especially for kids

6) Protein stabilizes blood sugar levels

7) Promote healthy brain function and learning – especially for kids

8) KadalaiMittai did not have any bad fat unlike any other kids candies

Kadalai Mittai and other candy bars:
Peanut candy bars are made all over the world and what makes the Tamil Nadu kadalai mittai more special is the addition of Jaggery. With out Jaggery candy bars can still be a source of protein but they increase the pitham level on the body. As the addition of Jaggery suppresses the pitham level Kadalai Mittai with Jaggery becomes a ideal choice for nutritious snack with out any side effects.

Where can you get quality kadalai mittai:
Though kadalai mittai health benefits are huge the problem lies in getting quality kadalai mittai. Though they are available on all street corners, none of them are hygienic and will not give you the real kadalai mittai taste. There are only two places in Tamilnadu where you can get tasty and hygienic kadalai mittai. Kovilpatti and Dindigul thangamani are the two prominent producers of kadalai mittai. They are producing high quality kadalai mittai for more than hundred years and also now you can get it ordered to your door steps through https://nativespecial.com.

Watch this video by Dr. Sivaraman to understand the importance of Kadalai Mittai intake – https://www.youtube.com/watch?v=-iQVh7UkVmE(Video is in Tamil)

NativeSpecial.com delivers both Kovilpatti and Dindigul Thangamani kadalai mittai to your door steps.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :