கசப்பு | தமிழர் உணவின் அறிவியல் – பகுதி 6

முந்தைய பகுதி – Benefit of pepper

கசப்பு விருப்பத்திற்குரிய ஒரு சுவையாக இல்லாததாலோ என்னவோ இன்று உலகில் உள்ள அநேக மக்களின் உணவுப் பழக்கத்தில் கசப்புக்கான இடம் அறவே இல்லை. ஆனால் ஏன் தமிழர்கள் உணவு முறையில் மட்டும் கசப்புக்கு இத்தனை முக்கியத்துவம் எனும் ஐயம் இயல்பானதே. காரண காரியமின்றி இங்கு எந்த பழக்கமும் நடைமுறையில் நிலைப்பதில்லை. உண்மையில் கசப்பு சுவை என்பது உணவின் விசத் தன்மையை நமக்குச் சொல்லும் ஓர் அறிவிப்பு முரசு. c2r(tas2r) என்பது கசப்புத் தன்மையை நமக்கு உணர்த்தும் ஜீன்.

காடுகளில் வாழ்ந்த மனிதனுக்கு விசத் தன்மையுள்ள பொருட்களை பிரித்தறிய கசப்பு முதன்மை அளவுகோலாக இருந்தது. பிறகு நாளடைவில் வேளாண்மை செய்து சமூகமாக வாழத் துவங்கிய பின் விசத்தன்மையின் குறியீடான கசப்பு உணவு முறையில் இருந்து விலக்கப்பட்டது. இதனால் பல தலைமுறைகளாக கசப்புத் தன்மையை ருசிக்காத, பெரும்பான்மை உலக சமூகங்களின் கசப்பை உணரும் ஜீன் செயல்பாடற்றுப் போனது. எந்த ஒரு ஜீனும் தொடர்ந்து சில தலைமுறைகள் செயல்பாடற்று இருக்கும் பொழுது தனது இயல்பை இழந்து விடுகிறது. இதன் காரணமாக இன்று உலகில் உள்ள பெரும்பான்மை சமூகங்கள் கசப்பை உணரும் திறனை இழந்து வருகிறது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப் பட்டுள்ளது – மேற்கோள்

Reference for gene identified for bitter taste
Maehashi, Kenji, et al. “Bitter peptides activate hTAS2Rs, the human bitter receptors.” Biochemical and biophysical research communications 365.4 (2008): 851-855.

References for bitter taste genes anthropology or movement of gene
Kim, U. K., and Dennis Drayna. “Genetics of individual differences in bitter taste perception: lessons from the PTC gene.” Clinical genetics 67.4 (2005): 275-280.
Campbell, Michael C., et al. “Evolution of functionally diverse alleles associated with PTC bitter taste sensitivity in Africa.” Molecular biology and evolution (2011): msr293.
Wooding, Stephen, et al. “Natural selection and molecular evolution in PTC, a bitter-taste receptor gene.” The American Journal of Human Genetics 74.4 (2004): 637-646.
Kim, Unkyung, et al. “Worldwide haplotype diversity and coding sequence variation at human bitter taste receptor loci.” Human mutation 26.3 (2005): 199-204.

இதில் ஆச்சர்யத்தக்க விடயம் என்னவெனில் தமிழர்கள் மட்டுமே இன்று வரை கசப்பை உணரும் திறனை முழுமையாக கொண்டுள்ள இனக்குழுவாக இருப்பதுதான். காரணம் நமது உணவு முறையில் கசப்பிற்கென ஒரு இடம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. விருப்பமில்லாத ஒரு சுவையை உணவுப் பழக்கத்தில் தொடர்ச்சியாக எடுத்து வர வேண்டுமெனில் அதன் அறிவியல் காரணங்கள் உணராமல் இதனைச் செய்ய இயலாது.

கசப்பு என்றாலே விசம் என முழுவதுமாக கசப்பினைப் புறக்கணித்து வந்த உலக வழக்கத்தின் மத்தியில் கசப்பும் தமக்குத் தேவை என்றுணர்ந்த்து முதன்முறையாக கசப்புத் தன்மை உள்ள வேப்ப மரத்தினை தங்களின் தினசரி வாழ்க்கை முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததே நமது நாகரீக வளர்ச்சி எவர் ஒருவரையும் விட தலையாயதாக இருந்த்திருப்பதன் அத்தாட்சி.

கசப்புத் தன்மையுள்ள வேப்ப மரத்திற்கு நாம் கொடுத்து வந்த முக்கியத்துவம்,

1) பாண்டியர்களின் தேசிய மரம் வேப்ப மரம்
2) பாண்டிய மன்னர்கள் வேப்பம் பூ மாலை சூடியே இருப்பர் (நச்சுக் கிருமிகளை அழிக்கும் கசப்புத் தன்மை கொண்டதென்பதால்)
3) வேப்பம் பூ ரசம், வேப்பம் பூ வடை என சமையலில் மிக முக்கிய இடம்
4) வேப்ப இல்லை பயன்பாடு. குறிப்பாக அம்மை நோயின் தாக்கத்தில் உடல் எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கும் பொழுது மற்ற தொற்றுக்கள் தாக்காமல் இருக்க வேப்பிலை வெகுவாகப் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது.
5) வேப்பம் பிசின். கட்டுமானத்திற்கும், சமையல் பாத்திரங்களுக்கான மேல் பூச்சாகவும் பயனில் இருந்து வந்துள்ளது.
6) தமிழ் தெய்வங்களுக்கான வழிபாட்டில் வேப்பம்பூ மாலைக்கு தான் என்றும் முதலிடம்

வேம்பும், கசப்பும் சங்க காலம் தொட்டே தமிழ் எழுத்துக்களில் உவமைப் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக நாலடியாரின் ஒரு பாடல்,

தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்! – அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.

சான்றோரும், சான்றோர் அல்லாதாரும் தத்தம் குணங்களில் எப்போதும் குறையாமல் இருப்பர். வெல்லத்தை யார் தின்றாலும் கசக்காது. வேப்பங்காயைத் தேவரே தின்றாலும் கசக்கும்.

வேம்பிற்கான காப்புரிமையை அமேரிக்கா ஒரு நிறுவனத்திற்கு வழங்கியதும் அதனை எதிர்த்து இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் ஐயா நம்மாழ்வார் பங்கு பெற்று அந்த காப்புரிமையை ரத்து செய்ததும் நிகழ்கால உண்மை.

ஆயிரம் ஆயிரம் விசமுள்ள கசப்பான மரம், செடிகளுக்கு மத்தியில், தமக்கு நன்மை பயக்கும் ஒரு மரத்தை பிரித்துணர்ந்து அதனைத் தமது உணவு முறையிலும், பழக்கத்திலும் கொண்டு வந்த அறிவுசார் சமூகம் நம் தமிழ்ச் சமூகம் என்று சொன்னால் அது மிகையாகாது.

கசப்பின் முக்கியத்துவம் என்னவெனில் நமக்கு எந்த தீங்கும் விளைவிக்காது நமது உடலில் உள்ள தேவையற்ற கெடுதல் விளைவிக்கும் உயிரிகளை வெளியேற்றுவது. இதன் காரணமாகத்தான் வேப்பம்பூ, பாகற்காய், கசப்புக் கீரை வகைகள் கட்டாயமாக நமது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மனித இனத்தின் தோற்றுவாயான ஆப்பிரிக்காவில் வாழும் மக்களுக்கே இன்று கசப்பினை உணரும் திறன் குறைந்து வரும் நிலையில் அங்கிருந்து இடப்பெயர்ந்து வந்த தமிழ் குடிகள் மட்டுமே இன்று வரை தம் தன்மை மாறாது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் பேசப்பட்டிராத துவர்ப்பு சுவையைப் பற்றி அடுத்த வாரம் காணலாம்

நம்ம ஊர் சுவை மிகுந்த பண்டங்களை தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com)

இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

அடுத்த பகுதி  – Benefit of Abrasion

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

×
0