Benefits of kadalai mittai - கடலை மிட்டாயின் நன்மைகள் | Nativespecial.com

Kadalai Mittai Benefits in Tamil

அதிக அளவு சத்துக்களைக் கொண்ட கடலை மிட்டாய் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உகந்தது. கடலை புரதச் சத்தினை அதிகளவு கொண்டது. அனைத்து பருப்பு வகைகளிலும் புரதம் நிறைந்திருந்தாலும் அவற்றில் கூடவே பித்தமும் சேர்ந்து கொள்வதால் தொடர்ச்சியாக உண்ணும் பொழுது பிற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காலையில் பித்தம் அதிகமாக இருந்த போதும் அதனுடன் வெள்ளம் சேர்க்கப் படும் பொழுது கடலைக் கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்து விடுகிறது. இதுதான் கடலை மிட்டாயின் அனைத்து நன்மைகளுக்குமான அடிப்படை. வெள்ளத்தின் சேர்ப்பில் பித்தம் சீர் செய்யப் படுவதால் தொடர்ச்சியாக கடலை மிட்டாயை உண்பதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே கடலையும், வெள்ளமும் சேர்ந்து அதி புரதம், இரும்பு, செலினியம் சத்துக்களைக் கொண்ட ஒரு சிறந்த பண்டமாக உருப்பெறுகிறது. கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை விட குழந்தைகளுக்கு சிறந்த இனிப்புப் பண்டம் வேறு இல்லை.

கடலை மிட்டாயின் சிறப்புகள்:

1) அதிக புரதச் சத்து
2) கடலையின் பித்த குணத்தினை சரி செய்யும் வெள்ளத்தின் சேர்க்கை
3) அதிக இரும்பு மற்றும் செலினியம் சத்துக்கள்
4) தசைகளை உறுதியாக்குவது – குறிப்பாக குழந்தைகளுக்கு
5) அதிக புரதம் உடம்பின் சக்கரை அளவினைக் கட்டுப்படுத்தும்
6) மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது – குறிப்பாக குழந்தைகளுக்கு
7) மற்ற குழந்தைகள் முட்டைகளில் இருப்பது போல் எந்தக் கெட்ட கொழுப்பும் அற்றது

நல்ல கடலை மிட்டாய் எங்கு கிடைக்கும்:
கடலை மிட்டாய் மிகச் சிறந்த குண நலன்களைக் கொண்டிருந்தாலும் நல்ல தரமான கடலை மிட்டாய் கிடைப்பதுதான் இன்றைக்கு சிரமமான காரியம். அனைத்து தெருக் கடைகளிலும் கிடைத்தாலும் அவை தரமானதாக இருப்பதில்லை. இன்றைய நிலையில் திண்டுக்கல் தங்கமணி மற்றும் கோவில்பட்டியில் மட்டுமே தரமான கடலை மிட்டாய்கள் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட நூறு வருடங்களாக அதிக தரமான கடலை மிட்டாய்களை இவர்கள் செய்து வருகிறார்கள். இணைய உலகில் இன்று தங்கமணி மற்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய்களை இப்பொழுது நாம் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (www.nativespecial.com) இணையதளத்தில் ஆர்டர் செய்து வீட்டில் இருந்தே சுவைக்கலாம்.

கடலை மிட்டாயின் சிறப்புகக்களையும் நமது குழந்தைகளுக்கு ஏன் தினமும் தர வேண்டும் என்பதையும் மருத்துவர் திரு. சிவராமன் அவர்கள் விளக்கும் இந்த காணொளியைப் பாருங்கள்.

 https://www.youtube.com/watch?v=-iQVh7UkVmE(Video is in Tamil)

NativeSpecial.com delivers both Kovilpatti and Dindigul Thangamani kadalai mittai to your door steps.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

 

×
0