Thoppai kuraiya tips in Tamil

Thoppai Kuraiya Tips in Tamil

Click here to read Thoppai kuraiya tips in English

தொப்பையும் உடல் பருமனும் புதியதொரு மன அழுத்தத்தை இன்று பெரும்பான்மையோரிடம் விதைத்து வருகிறது. உடல் உழைப்பு, உணவுப் பழக்கம் என மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்க அதற்கான உடலியல் மாற்றங்களும் நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது. உடல் இயக்கத்தின் அடிப்படை இயல்புகளைப் புரிந்து கொள்வது கால மாற்றத்தின் காரணமாய் ஏற்படும் உடல் மாற்றங்களைக் களைய பெரிதும் உதவும்.

தொப்பையைக் குறைக்க பல வழி முறைகள் கூறப் பட்டாலும் அவ்வழிமுறைகள் அனைவரின் உடலுக்கும் உகந்ததாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக ஒரு சிலருக்கு எவ்வளவு உணவு உண்டாலும் தொப்பைக் கூடுவதில்லை. இதற்கு காரணம் அவர்களின் இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மை, நமது வழக்கில் கூறுவதானால் பித்தத் தன்மை. நமது சித்த மருத்துவ முறை உடலின் வாதம், பித்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதனையே “மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்று வழக்காகக் கூறுவர். இதன் அடிப்படை என்னவெனில் உடல் இரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களே தொப்பைக்கும், உடல் பருமனுக்கும் முதற் காரணம். இந்த அமிலத் தன்மையைக் குறைக்காமல் வேறெந்த முறையைப் பின்பற்றினாலும் பயன் இருக்காது.

எனவே அமிலத் தன்மையைக் குறைக்க மிகச் சிறந்த வழி இஞ்சி மற்றும் நல்லெண்ணைக் குளியல். இஞ்சிச் சாறு தொடர்ச்சியாக அருந்தி வந்தால் அமிலத் தன்மைக்கு குறைய வழி செய்யும்.

இதன் பிறகு தினமும் காலையில் சுடுநீரில் நல்ல தேனைக் கலந்து பருகி வருவதும், இரவில் குறைந்த அளவு உணவை உண்டு வந்தால் மிக உறுதியாய் உடல் பருமனும், தொப்பையும் குறையும்.

இஞ்சி சாறு அருந்த மிகவும் கசப்பாக இருக்கும் என்பதால் இஞ்சி மரப்பாவை தினமும் எடுத்துக் கொள்ளலாம். இஞ்சி அதிகம் சேர்க்க ஒரே சிறந்த வழி இஞ்சி மரப்பாதான்.

சுத்தமான இஞ்சி மரப்பா மற்றும் நல்ல தேன் ஆகிய இரண்டையும் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (nativespecial.com) இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிலேயே பெறலாம்.

சுத்தமான தேன், சத்தான இஞ்சி மரப்பா

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

தொப்பை குறைய – தமிழில்

Thoppai Kuraiya in Tamil

தொப்பையைக் குறைக்கும் வழிமுறைகளுக்கான தேடல் கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் பொதுவானதே. இந்தக் கட்டுரையில் அதற்கான திட்ட வட்ட நடைமுறைகளையும் அதற்கான காரணிகளையும் முழுவதுமாகக் காணலாம்.


முதலில் நாம் புரிந்து கொள்ளக் கூடியது உடல் பருமன் ஆரோக்கிய சிதைவுக்கான அறிகுறி அல்ல, வயிற்றில் கூடும் கொழுப்பான தொப்பைதான் ஆரோக்கியச் சிதைவுக்கான அடிப்படை. எனவே நமது நோக்கம் தொப்பையைக் குறைப்பதை நோக்கி இருத்தலே அவசியம்.

இப்பொழுது அதற்கான நடைமுறைகளைக் காண்போம்

இனிப்பூட்டப் பட்ட பானங்கள் (கோக், பெப்சி போன்றவை)

நமது வயிற்றில் கொழுப்பின் சேர்க்கைக்கு இவ்வகையான பானங்கள் முதல் காரணம். சக்கரை நமது நுரையீரலால் மட்டுமே செரிமானப் படுத்தப் படும். திரவ வடிவில் சக்கரை உட்கொள்வதால் மூளை இதனை திட சர்க்கரையைப் போல் பதிவு செய்வதில்லை எனவே அளவுக்கு அதிகமாக சக்கரை உட்கொள்ள இது வழி செய்கிறது. உட்கொள்ளப் பட்ட சக்கரை அளவுக்கு அதிகமாக இருப்பதால் இதனை கொழுப்பாக மாற்றி வயற்றில் சேர்க்கிறது நுரையீரல். இதுவே தொப்பைக்கான அடிப்படைக்கு காரணி. இன்சுலின் சுரப்பு பாதிக்கப் பட்டு சர்க்கரை நோய் துவங்குவது இந்த பாதிப்பினால்தான். எனவே முதல் வேலையாக இனிப்பூட்டப் பட்ட பானங்களை நிறுத்துவது அவசியம்.

ஏற்கனவே வயிற்றில் உள்ள கொழுப்பினைக் கரைக்க இஞ்சி மிட்டாய் (இஞ்சி மரப்பா) மிகச் சிறந்த வழி. இஞ்சி அல்கலைன் ஆக இருப்பதால் இதனை உட்கொள்ளும் பொழுது இரத்தத்தின் அமிலத் தன்மையை நிகர் செய்ய வயற்றில் உள்ள கொழுப்பினைக் கரைக்கத் துவங்கும் நமது உடல்.

அதிகப் புரதம்:

புரதச் சத்து நிறைந்த உணவுகள் எவ்வளவுக்கு எவ்வளவு உட்கொள்கிறோமோ அந்த அளவு தொப்பையும் குறையும் அதே போல குறைந்தது அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொப்பை கூடுவதையும் தவிர்க்கும். எனவே தொப்பையைக் குறைப்பது மாட்டுமின்றி மீண்டும் வராமல் தவிர்க்கவும் அதிபுரதம் நிறைந்த உணவுகள் உட்கொள்வது அவசியம். அசைவ உணவுகளில் எப்பொழுதும் புரதச் சத்து அதிகம் இருந்தாலும் அவற்றில் உள்ள மற்ற பக்க விளைவுகளால் அசைவ உணவை யாரும் பரிந்துரைப்ப தில்லை. அதிகப் படியான புரதத்தை அசைவ உணவுக்கு இணையாகக் கொண்டுள்ளது நம்ம ஊரு எள்ளு தான். எள்ளினை உட்கொள்ளவே நாம் எள்ளு மிட்டாய்கள் செய்து வந்தோம்.

எனவே ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு எள்ளு மிட்டாய்கள் உண்பது உடலின் புரதத்தைக் கூட்டி தொப்பையைக் குறைக்கும். குறிப்பாக குழந்தைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி எள்ளினை உட்கொள்ள ஏதுவாக தரமான எள்ளுமிட்டாய்கள் இங்கு வாங்கலாம்..

கார்போஹைரேட் குறைப்பின் அவசியம்:

இருபதுக்கும் மேற்பட்ட தொடர் ஆராய்ச்சிகள் குறைந்த கார்போஹைடிரேட் உணவுப் பழக்கம், கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளை உண்பதை விட மூன்று மடங்கு கொழுப்பினை கரைக்கிறது என்பது நிரூபிக்கப் பெற்றிருக்கிறது. அதே சமயம் கார்போஹைடிரேட் சத்து நமது உடலுக்கு மிகவும் அவசியம் எனவே முற்றிலும் கார்போஹைடிரேட்டைத் தவிர்ப்பதும் தவறானது. எனவே இரவில் அரிசி உணவுகளைத் தவிர்த்தலும், அதி உயர் கார்போஹைட்ரெட் சத்தினைக் கொண்ட உருளைக்கிழங்கு போன்ற காய்களைத் தவிர்த்தலும் போதுமானது.

fast food, low carb diet, fattening and unhealthy eating concept -close up of fast food snacks and cola drink behind no symbol or circle-backslash prohibition sign

சுருக்கம்:

1) வயிற்றில் சேரும் கொழுப்பினைக் கலைவதே தொப்பையைக் குறைக்க முதல் படி
2) இனிப்பூட்டப்பட்ட பானங்களை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்
3) சேர்ந்திருக்கும் கொழுப்பினைக் குறைக்க இஞ்சி மரப்பா தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்
4) புரதச் சத்து நிறைந்த உணவான எள்ளுமிட்டாயினை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்
5) இரவில் அரிசியினையும், அதி கார்போஹைடிரேட் உணவான உருளைக்கிழங்கினையும் தவிர்க்கவும்

இவற்றினை தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு மாதங்களில் தொப்பை குறைவது உறுதி.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :