Varattu Irumal Home Remedies in Tamil

Varattu Irumal home remedies in Tamil

வறட்டு இருமல் (Dry cough) போல் குழந்தைகளை சிரமத்துக்கு உள்ளாக்கும் விடயம் வேறெதுவும் இல்லை. உண்ணும் பொழுது இருமல், உண்ட பின் வாந்தி, தூங்கிய பின் இருமல் என பாடாய்ப் படுத்தி விடும். என்ன காரணத்தினால் இருமல் வருகிறது என்று அறிவது மிகக் கடினம். எனவே எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் வறட்டு இருமல் வராமல் தவிர்ப்பது என்பது இயலாத காரியம். கேக் சாப்பிடுவதால் கூட வரலாம். வறட்டு இருமலுக்கு மிகச் சிறந்த வைத்திய முறை என்றால் அது தொண்டையை மென்மையாக்கி இருமலின் தாக்கத்தைக் குறைத்து உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் வரை அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்வதுதான்.

தொண்டையை மென்மையாக்கி இருமலையும் அதன் வேதனையையும் கட்டுக்குள் வைக்க நிறைய வீட்டு வைத்திய (Home Remedies) முறைகள் உண்டு. அவற்றுள் சில,

1) சுத்தமான தேனை சுடுநீரில் கலந்து இருமல் அதிகம் இருக்கும் பொழுது பருக வேண்டும்
2) பால், காபி குடிக்கும் பொழுது வெள்ளைச் சர்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்த வேண்டும்
3) தொடர்ந்து கொம்புத் தேனை ஒரு சிறு கரண்டி அளவு உண்டு வந்தால் இருமலின் தாக்கம் வெகுவாகக் குறையும்


ஏறக்குறைய அனைத்து இருமல் மருத்துவத்திலும் தேனின் பங்கு இருக்கும். இதற்கு காரணம் தேனைப் போல தொண்டையை மிருதுவாக்கும் பணியை வேறெந்த மருந்தாலும் செய்ய இயலாது. எங்கள் குழந்தையின் இருமாளுக்காகச் சென்ற பொழுது அமெரிக்க மருத்துவர்களின் அறிவுறுத்தலும் தேனைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதுதான். இருபது நாளைக்கு மேலும் இருமல் தொடர்ந்தால் மட்டுமே ஆன்டி பையோட்டிக்ஸ் (Anti Biotics) பயன்படுத்துவார்கள். இதுவே நல்ல மருத்துவ முறையும் கூட. எனவே குழந்தைக்கு இருமல் வந்த உடன் மருத்துவரிடம் ஓடாமல் தேனைக் கொடுத்து கட்டுக்குள் வைக்க முயல்வது நலம். பொதுவாகவே நல்ல தேன் கிடைத்தால் தினமும் குழந்தைகளுக்கு சிறுது கொடுத்து வருவது மிக நல்லது.

தேன்தான் இருமலுக்கானஆகச் சிறந்த மருந்து என்று தெரிந்தாலும் நல்ல தேன் கிடைப்பதுதான் இன்று உள்ள சிக்கல். வெளியில் விற்கப்படும் தேனில் என்பது சதவிகிதம் போலி அல்லது பண்ணைத் தேன்தான்.
நல்ல தேன் கிடைக்கும் இடத்தில் இருந்தால் நீங்கள் குடுத்து வைத்தவர்கள்.

நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (Nativespecial.com) இணையத்தில் சுத்தமான கொம்பு தேன் மற்றும் மலைத் தேன் (Hill Honey) ஆன்லைனில் வாங்கலாம். கூடலூர், கரண்டமலை, பன்றி மலை போன்ற பகுதிகளில் இருந்து மிகச் சிறந்த தேனை கொண்டு வருகிறார்கள்.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கண்டிப்பாக் கொடுக்கக் கூடாது.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!