வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவு முறை மாற்றங்கள் என அனைத்தும் நமது உடல் வெப்பத்தை அதிகரித்து அதனால் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. அதிகப்படியான உடல் சூடு உடல் சோர்வு, தொடர்ச்சியான சளி, காய்ச்சல்,தைராய்டு என பல உடல் சிக்கல்களைக் தோற்றுவிக்க அடிப்படைக் காரணம். எனவே உடல் சூட்டினை மிகாமல் காப்பது ஆரோக்கியத்திற்கு அதிமுக்கியம்.
மோர், இளநீர், நல்லெண்ணைக் குளியல் என நாம் அறிந்த வழிகள் நிறைய இருந்தாலும் இவை அனைத்தும் உடலின் சூட்டினை வேகமாகக் குறைப்பதால் அனைவருக்கும் ஏற்ற வழிமுறையாக இவை இருப்பதில்லை. இவற்றை விட மிகச் சரியான, எளிமையான வழிமுறை நம் பாரம்பரியமாக வந்திருக்கிறது. பழனியில் நவபாசான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த உணவினையும் அளித்துள்ளார். ஆம், மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம். காலையிலும் மாலையிலும் ஒரு சிட்டிகை பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும் உடல் சூடு கட்டுக்குள் வைக்கப் படும், மேலும் அதீத ஆரோக்கியமானதும் கூட. காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது பஞ்சாமிர்தம், கிருமித் தொற்றாக இல்லாமல் உடல் சூட்டினால் வரும் காய்ச்சலுக்கு நேரடி நிவாரணம் பஞ்சாமிர்தம்.
இவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றிக் கூறாக காரணம் இன்றும் பழநியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம். பங்குனியில் துவங்கும் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கவே வழி வழியாக இந்தப் பயன்பாடு இருந்து வந்துள்ளது.
இவ்வளவு அறிய பண்டமான பஞ்சாமிர்தம் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். பழனி மலையில் கிடைக்கும் பஞ்சாமிர்தம் கூட மலை வாழையில் செய்யப் படுவதில்லை. தேவை அதிகரித்ததற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை என்பதால் வேறு பழங்கள் வைத்து செய்யப் படுகின்றது. அதனால் 15 நாட்களில் இவை கெட்டு விடுகிறது. மேலும் தனது மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது. ஆனால் மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.

தீவிர தேடலுக்குப் பின் நேட்டிவ்ஸ்பெஷல் குழு சிறப்பான முறையில் மலை வாழை இட்டு பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் செய்யும் ஒருவரை அறிந்து இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் அதனை இணைத்துள்ளோம். தகுந்த பொருட்கள் கிடைக்குமானால் பஞ்சாமிர்தம் வீட்டிலேயே செய்வது எளிது, இல்லாத படிக்கு நேட்டிவ்ஸ்பெஷல் இணைத்தில் ஆர்டர் செய்து அடுத்த நாளே வீட்டில் பெறலாம்.
தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆயிரம் உணவுப் பண்டங்கள், பானங்கள் இருந்தும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே அமிர்தம் என்ற பெயர் வழங்கப் படுகிறது. இதுவே இதை விடச் சிறந்த சுவையும், மருத்துவ குணமும் கொண்ட பொருள் வேறில்லை என்பதற்கான சான்று.
NativeSpecial.com/sg/ – Home for authentic traditional traditional eateries




