எதிர்ப்பு சக்தி மிகுந்த போகரின் பாரம்பரிய மலை வாழை பஞ்சாமிர்தம்

வெயில் காலம் மற்றும் கால மாற்றத்தால் ஏற்படும் வெப்ப மாற்றத்தின் காரணமாக உருவாகும் சளி,இருமல், காய்ச்சல் ஆகியவை இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பொதுவானதாக ஆகிவிட்டது. இவற்றை மிக எளிமையாக கையாளும் வழிமுறை நம் வாழிவியலில் இன்றும் இருந்து வருகிறது.

பழனியில் நவபாசான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தினையும் நமக்கு அளித்துச் சென்றார். மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம் தான் அது. பக்தி, உணவு என அனைத்தும் அன்று வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கவே இருந்தது என்பதற்கு பஞ்சாமிர்தம் மிகச்சிறந்த எடுத்துக் காட்டு.

காலையிலும் மாலையிலும் ஒரு சிட்டிகை பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து

நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படுத்தப்படும். காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம்.

இவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றிக் கூறக் காரணம் இன்றும் பழநியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம்.

பங்குனியில் துவங்கி ஆண்டு முழுவதும் இதனை வீட்டில் வைத்து உண்பது வழக்கம். இவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தம் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். பழனி மலையில் கிடைக்கும் பஞ்சாமிர்தம் கூட மலை வாழையில் செய்யப்படுவதில்லை. தேவை அதிகரித்ததற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை என்பதால் வேறு பழங்கள் வைத்து செய்யப் படுகின்றது. அதனால் 15 நாட்களில் இவை கெட்டு விடுகிறது. மேலும் தனது மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது.

ஆனால் மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.

அனைத்து பாரம்பரிய பண்டங்களையும் மீட்டுருவாக்கம் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் பாரம்பரியமான இந்த மலை வாழை பஞ்சாமிர்தமும் சேர்க்கப்பட்டுள்ளது

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!