முருங்கை இலையின் மகத்துவம்

நாம் தினமும் காணும் முருங்கையின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். உடம்பில் அதிகம் சேர்க்கப் படாத ஆனால் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய கசப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளில் ஒன்றான கசப்பு சுவையுடன் மிகுந்த உடல் நலன்களைத் தர வல்லது. “Moringa” என்று இணையத்தில் தேடினால் குடுவையில் அடைத்து 1000 முதல் 10000 ரூபாய் வரை வெளிநாடுகளில் விற்கப்படுகிறது இந்த முருங்கை இலை பொடி. உலகின் மிகச் சிறந்த தலைவரான பிடல் காஸ்ட்ரோ அவர்கள் இதன் அருமை உணர்ந்து “Magic Tree” என்று பெயரிட்டு இதனை கியூபாவில் விளைவித்து மக்களுக்கு வழங்க வழி செய்தார். இப்படி உலகமெல்லாம் போற்றப் படும் முருங்கை இலை அதிகமாக நமது உணவில் நாம் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் தினசரி இதனை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம். இரண்டு தனித் தனி ஆராய்ச்சிகளின் முடிவுகள் கீழே,

1) 30 பெண்களைக் கொண்டு செய்யப் பட்ட ஒரு ஆராய்ச்சியில். தினசரி 7 கிராம் (ஒரு ஸ்பூன்) முருங்கை இல்லை பொடி தொடர்ந்து மூன்று மாதம் எடுத்தவர்களுக்கு சராசரியாக 13.5% சக்கரை குறைந்திருந்தது.

2) 6 நபர்களை வைத்து செய்யப் பட்ட மற்றொரு ஆராய்ச்சியில் 50 கிராம் அளவு முருங்கை இல்லை சேர்த்த பொழுது ஒரே வேளையில் 21% சக்கரை குறைந்தது இது மட்டும் இன்றி உடல் கொழுப்பினைக் கரைக்கக் கூடியது, ஆர்சனிக் விஷத்தை நீக்க வல்லது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இத்தகைய சிறப்புடைய முருங்கை இலைப் பொடி சரியான முறையில் தயார் செய்து கிடைப்பதுதான் அரிதாக உள்ளது. பாரம்பரியமான ஊஞ்சங் காட்டுத் தோட்டத்தில் இதனை இப்பொழுது செய்கிறார்கள். முப்பது வருடத்திற்கு மேல் பழமையான மரங்களின் இலைகளை நிழலில் காய வைத்து ருசிக்காக பார்மபரிய முறையில் கடலைப் பருப்பு, வர மிளகாய் சேர்க்கப் பட்டு மிகவும் சுவையாக தயாரிக்கப் படுகிறது. இதை தோசை இட்லி மற்றும் அரிசி சோறுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Order Now @https://nativespecial.com/product/murungai-keerai-rasam-podi-/
Delivery within 3 to 5 days including free shipping.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

0