உப்பு (SALT) |தமிழர் உணவின் அறிவியல்-3

அமெரிக்கா வாழ் ஆராய்ச்சியாளர் திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் nativespecial.com வெளியிடும் “தமிழர் உணவின் அறிவியல்” தொடர

(முந்தைய பகுதி)

பகுதி-3
உப்பு(SALT)

உப்பு, உலகின் முதல் வணிகப் பொருள். உயிர் வாழ்விற்கு உப்பு அத்தியாவசியம். நமது உணர்வுகளைக் கடத்தும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கான காரணி உப்பு தான். எந்த சமூகம் உப்பின் தேவையை உணர்ந்து உற்பத்தி செய்யத் துவங்கியதோ அவையே நிலைத்து வாழ்ந்து நாகரிக வளர்ச்சி பெற்றது. எனவேதான் உலகின் பழமையான நாகரீகங்கள் அனைத்தும் ஆறும், கடலும் சேரும் டெல்டா பகுதிகளில் வளர்ந்தன. எகிப்தின் நைல் ஆற்றுப் படுகையும், தமிழகத்தின் காவேரி ஆற்றுப் படுகையும் தான் இவர்களின் தொன்மையான நாகரிகத்திற்கு அடிப்படை.

முதலில் கடல் நீரை நேரடியாகத் தங்களின் உப்பின் தேவைக்குப் பயன்படுத்தினர் பிறகு அதனை நெய்து உப்புக் கல்லாக்கும் வழிமுறைகள் மெல்ல பயன்பாட்டிற்கு வந்தன. உலகின் முதல் உப்பளம் நமது வீட்டுத் தாளிப் பானைகள் தான். தாளிப் பானைகள் அடுக்குகளாக நமது வீடுகளில் கண்டிருப்போம், அதில் மேல் பானை எப்பொழுதும் உப்புப் பானையாகத் தான் இருக்கும். மேலும் முதல் பானை மூடி இல்லாத பானையாகத்தான் இருக்கும். அதில் கடல் நீர் நிரப்பி வைத்து அது காற்றில் மெல்லக் காய்ந்து உப்புக்கு கட்டியாகி விடும், பிறகு அதனை சமையலுக்குப் பயன்படுத்தினர். இந்த முறை உலகின் வேறெந்த பகுதியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு நிலப் பகுதியில் உள்ள மக்களுக்கு உப்பின் தேவை இருந்த காரணத்தால் உப்பளங்கள் உருவாக்கப் பட்டு கடலோரப் பகுதிகளில் இருந்து உப்பு நிலப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டது.

உப்பின் அத்தியாவசியத் தேவையினால் உலகின் முதல் வணிகப் பொருளானது உப்பு. கடல் கடந்து உப்பினை பல நாடுகளுக்கு அனுப்பிய முதல் அரசு பாண்டியர்களினது ஆகும். தூத்துக்குடி, கோவளம் ஆகிய இடங்களில் பெரும் உப்பளங்கள் நிறுவப் பட்டன. உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டினர். கோவளம் (கோ அளம்) பெயர்க்க காரணமும் இதுதான்.

உப்பின் உற்பத்திற்குப் பின்னரே பதப் படுத்துதல் எனும் முறையே உருவானது. உலகில் வளர்ந்து வந்த நாகரிகங்களில் உச்சானிக் கொம்பில் இருந்த தமிழர்கள் உப்பினைக் கொண்டு உணவினைப் பதக் படுத்தும் முறையைத் துவங்கினர். உப்பிற்கு நீரை உறிஞ்சும் திறன் உண்டு என்பதை அறிந்து, உணவுப் பொருளின் நீரினை உறிஞ்சி விட்டால் அதில் நுண்ணுயிர்கள் பெறுக வழி இல்லாமல் கெடாமல் இருக்கும் எனும் அறிவியல் அறிவின் விளைவாக ஊறுகாய், கருவாடு போன்ற உணவுப் பொருட்களை உருவாக்கினர். நார்த்தங்காய், எலுமிச்சை போன்ற பொருட்களை ஊறுகாய்க்கு பயன்படுத்திய காரணம் அவற்றில் தண்ணீர் குறைவாகவும், சிட்ரிக் அமிலம் அதிகமாகவும் இருப்பதால் அதிக நேரம் காய வைக்கத் தேவை இல்லை.


இது மிகப் பெரிய நாகரிக மாற்றத்தை உருவாக்கியது. பயணத்தின் பொது உணவுத் தேவையை நிறைவு செய்ய, வறட்சி காலங்களுக்கு உணவைச் சேகரித்து வைத்துக் கொள்ள என பெரும் வாழ்வியல் மாற்றத்தினை ஏற்படுத்திய தருணம் இது. இன்றைய பெட்ரோல் போல அன்று உலகின் அதி முக்கிய வணிகப் பொருள் உப்பாக இருந்தது. அதன் வணிகம் பாண்டியர்களின் கையில் இருந்தது.

சேந்தன் பூதனார் பாடலொன்று அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் ‘வெண்கல் அமிழ்தம்’ என்று உப்பு உரைக்கப்பட்டுள்ளது.

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்

உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம்

குடபுல மருங்கின் உய்ம்மார், புள்ஓர்த்துப்

படை அமைத்து எழுந்த பெருஞ்செல் ஆடவர்

நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்

குறைக்குளம்பு உதைத்த கல்பிறழ் இயவு (அகம். 207: 1-6)

‘கடலினது நீர் பரவிய உப்பளத்தில் விளைந்து நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினை மேற்குத் திசையில் உள்ள நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பதற்காக, வீரம் மிக்க ஆடவர் நல்ல நிமித்தம் பார்ப்பர். அது தெரிந்தவுடன் படைகளை ஆயத்தம் செய்து உப்பு மூட்டைகளை வெண்மையான முதுகை உடைய கழுதைகளின் மீது ஏற்றிக்கொண்டு செல்வர். மலைச் சாரலில் அவை செல்லும் போது குளம்புகள் உதைப்பதால் கற்கள் பிறழ்ந்து கிடக்கும். அப்படிப்பட்ட கொடுமை யான பாலை நில வழியில் எம் மகளை அழைத்துக்கொண்டு போயிருக்கிறானே கொடுமைக்காரன்’ என்று வளர்ப்புத் தாய் புலம்புவதாக நீண்டு செல்லும்.

நெய்தல் நிலப் பகுதியில் விளைந்த உப்பைப் பிற நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யும் வாணிபத் தொழில் நடைபெற்றுள்ளதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. நெய்தல் நிலமாகிய கடற்கரைப் பகுதிகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்த காரணத்தால் பரவலாக உப்பளங்கள் இருந்துள்ளன. உப்பு தமிழர் வாழ்க்கையில் நீண்ட பாரம்பரியம் மிக்கதும், ஆழமானதுமான பண்பாட்டுக் குறியீடு.

உப்பும், சக்கரையும் உற்பத்தி செய்யத் துவங்கிய முதல் சமூகம் வாழ்வியலின் அடுத்த கட்டமாக சமையலை நோக்கி நகர்ந்தது. இன்று வரை பல நாடுகளில் உணவு வேகவைத்தல் எனும் நிலை தாண்டாத சூழலில் நாம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே சமையல் எனும் இடத்திற்கு நகர்ந்ததற்கான அடிப்படை உப்பும், சக்கரையும் உற்பத்தி செய்யத் துவங்கியதால் தான்.

சமையலில் புளியின் பங்கும் அதன் அறிவியல் நோக்கங்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்..

நம்ம ஊர் திண்பண்டங்கள் தற்பொழுது nativespecial.com இணைய தளத்தில் ஆன்லைனில் வாங்கலாம்

“தமிழர் உணவின் அறிவியல்” அடுத்த பகுதி.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

கருப்பட்டி (Karuppatti) |தமிழர் உணவின் அறிவியல்-2

அமெரிக்கா வாழ் ஆராய்ச்சியாளர் திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் nativespecial.com வெளியிடும் “தமிழர் உணவின் அறிவியல்” ஓர் ஆவணத் தொடர்

(முந்தைய பகுதி)

சர்க்கரை (Glucose) இன் தேவை:

சக்கரை (குளுக்கோஸ்) இன் தேவையை நிறைவு செய்வதே சமூகமாக வாழத் துவங்கிய இனங்களுக்கு இருந்த முதல் சவால். மூளை மற்றும் உடலின் இயக்கத்துக்கான சக்திக்கு சக்கரை தான் மூலம் என்பதால் சக்கரைத் தேவையில் தன்னிறைவு அடைவதை நோக்கிய பயணம் ஒவ்வொரு இனக்குழுவுக்கும் அத்தியாவசியமான ஒன்றானது. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சக்கரையை ஒளிச்சேர்க்கை(Photosynthesis) மூலம் பெற்றுக் கொள்கிறது. மனிதனுக்கு அந்த ஆற்றல் இல்லாததால் துவக்கத்தில் தேன்,பூக்கள் என சக்கரைக்கான தேவையைப் பூர்த்தி செய்து வந்தான். ஒரு கட்டத்தில் தேவை அதிகரிக்க இன்றைய வைட்டமின் மாத்திரைகளில் எப்படித் தேவையான வைட்டமின் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு திட வடிவில் சேர்த்துக் கொடுக்கப் படுகிறதோ அது போலவே சக்கரையை மட்டும் பிரித்தெடுக்கும் வழிகளைத் தேடலானான். அத்தகையதொரு கால கட்டத்தில் உலகின் முதல் வேதியியல் கண்டுபிடிப்பாய்க் கருப்பட்டியை உருவாக்கினர் குமரிக் கண்ட மக்கள் (இன்றைய தமிழர்கள்).

                                                                                         Karuppatti-Tamil

 

அறிவியல் அடிப்படை:
 சூரிய சக்தியை சக்கரையாக மாற்றும் ஆற்றல் படைத்த தாவரங்கள், பூக்கும் காலத்தில் அதிகப்படியான சக்கரையை பூக்களை நோக்கிச் செலுத்தும். இதனை உணர்ந்த காரணத்தால் பனை மற்றும் தென்னை மரங்கள் பாலையிட்டுப் பூக்கும் தருவாயில் அதனை வெட்டி விட்டுக் குடுவைகள்கட்டி வடியும் நீரைச் சேகரித்தனர். இயல்பாக அமிலத்தன்மை கொண்ட நீரினைச் சமன்படுத்தச் சுண்ணாம்பு தடவிய குடுவையில் சேகரித்தனர். சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர், இல்லையென்றால்அமிலத் தன்மை அதிகரித்து கள்ளாகி விடும். அதிகப்படியான சுண்ணாம்பு சேர்த்தாலும் காரம் அதிகரித்து கீடோன் (Ketone) எனும் வேதிப் பொருளாக மாறிவிடும். சுண்ணாம்பிற்கான மூலமாக முதலில் இருந்தது தமிழக, இலங்கைக்கு இடையிலான சுண்ணாம்புக் கால்வாயில் உள்ள பவளப் பாறைகள்தான். எனவேதான் சக்கரை உற்பத்தி முதலில் நமக்குச் சாத்தியம் ஆயிற்று.

இவ்வாறு சேகரிக்கப் பட்ட பதநீரை நீண்ட நாட்களுக்குச் சேகரித்து வைக்கவும், தேவையான இடங்களுக்கு அனுப்பி விற்பனைப் பொருளாக மாற்றவும் அதனை நெய்யும் (crystallization) முறை உருவாக்கப்பட்டது.. பதநீரில் உள்ள கலவைகளைப் பிரித்துத் தனிமைப் படுத்தும் பொழுது, பிரித்தெடுக்கப்பட்ட சக்கரை ஒன்றுடன் ஒன்று சேர்ந்த கட்டியாகிறது. இப்படி ஒன்றுடன் ஒன்று தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டு நிற்பதே நெய்தல் எனப்பட்டது. துணி நெய்தல், நெய்தல் தினை ஆகியவற்றின் பெயர்க் காரணமும் இதுவே. பதநீரைக் காய்ச்சி அதில் உள்ள கலவைகளைப் பிரித்து சக்கரையின் சேர்மஒருங்கில் கருப்பட்டி உருவாக்கப் பட்டது..

வேதியியல் அறிவு, பானைகள் செய்யும் திறன், கட்டிப் படுத்தும் வழி முறை, காய்ச்சும் களன்கள், வேதியியல் புரிதல் என அனைத்தும் கை கொண்ட சமூகமாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதற்கான உறுதியான சாட்சி கருப்பட்டி.

கருப்பட்டியின் சிறப்புகள்:

1) எந்த வேதியல் சேர்மானமும் செய்யாமல் இயற்கையான முறையில் உருவாக்கப் படுவதால், இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் செறிவாகக் கருப்பட்டியில் உள்ளது
2) பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால, இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்
3) கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை வலிமைப் படுத்தும் ஆற்றல் கருப்பட்டிக்கு உண்டு. கிராமங்களில் கோழிகளுக்கு கால் முறிந்து விட்டால் கருப்பட்டித் தண்ணீர் வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு.

 இனிப்பும், உப்பும் உற்பத்தி செய்து கொண்ட சமூகங்கள் தான் உணவின் எல்லைகளை விரித்து நாகரீக வளர்ச்சிக்குள் பாய்ந்தன. அதில் முன்னோடியான நாம் உப்பின் உற்பத்தியை எப்படிச் செய்தோம் என்பதை அடுத்தப் பகுதியில் காணலாம்.இதன் துவக்கமாக நமது உணவுக் கலாச்சார வளர்ச்சியின் முதல் வித்தான கருப்பட்டியின் ஆச்சர்யமான அறிவியல் தகவல்கள் பற்றி அடுத்த பகுதியில் காணலாம்
அடுத்த பகுதி

Please Subscribe to our Newsletter below in order to receive our Write ups continuously.  All our write ups will provide information and knowledge on our Native Food Science with Scientific and Logical Approach.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

தமிழர் உணவின் அறிவியல் – (The Tamil Food Science)

ஒரு நிலப்பரப்பின் தட்பவெட்ப நிலையே அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கத்தைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி. எடுத்துக் காட்டாக அமெரிக்கா, கனடா போன்ற குளிரான பகுதிகளில் தயிர் பயன்பாட்டில் இல்லை காரணம் குளிர் பாக்டீரியாவின் வளர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்தும் அதனால் அவர்கள் அதிகம் சீஸ் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம்மைப் போன்ற வெப்பப் பகுதிகளில் பெரும்பாலும் தயிர் உணவின் முக்கிய பகுதியாய் இருக்கும் காரணம் வெப்பம் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ஒரு இனக்குழுவின் உணவுக்கு கலாச்சாரமே அவர்களின் நாகரிக வளர்ச்சிப் பாதையின் தொடர்புச் சங்கிலி. ஒரு இனக்குழு தனது நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்கிறது. பின்பு தங்களின் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் உணவுப் பழக்கங்களும் பரிணாம வளர்ச்சி பெற்று உணவே மருந்து எனும் நிலையை நோக்கி நகர்கிறது. தேங்காய், நொங்கு, பதநீர், தேன் போன்ற இயற்கை உணவுகளே நமது உணவுக்கு கலாச்சாரத்தின் துவக்கம். பின்பு நிலத்தைப் பக்குவப படுத்தி படிப்படியாக உணவின் அடுத்த படி நிலைக்கு தங்களை நகர்த்திக் கொண்டனர் தமிழர்கள்.

எந்த ஒரு இனக்குழு தங்களுக்கு தேவையான சர்க்கரைக்கான தேவைகளை உணர்ந்து அதற்கான வழிமுறைகளைக் கண்டதோ அவை அனைத்தும் நாகரிக வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலைக் கண்டன. அவ்வகையில் தேனிலிருந்து நகர்ந்து கருப்பட்டியைத் தங்களின் உணவின் தேவைக்காக முதன்முதலில் தமிழர்கள் பயன்படுத்தத் துவங்கியதே உலகின் முதல் நாகரிக மேம்பாடு. அறிவியலோ அல்லது அனுபவமோ, ஒரு அறிவுசார் இனக்குழுவினாலேயே இது சாத்திய படும்.

இப்படி உலகின் தலை சிறந்த உணவுக்கு கலாச்சாரத்தையும், தொடர்ச்சியையும் கொண்டுள்ள தமிழர்கள் இன்றுவரை அதனை அறிவியல் பூர்வமாக ஆவணப் படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. வைன், பிரெட் போன்றவற்றிற்கு உள்ள ஆவணங்களில் நூறில் ஒரு பங்கு கூட கல், பதநீர், புட்டு போன்றவற்றிற்கு இல்லை. இவற்றை ஆவணப் படுத்தும் முதல் முயற்சியின் துவக்கமே இந்த “தமிழர் உணவின் அறிவியல்” தொடரின் நோக்கம்.

இதன் துவக்கமாக நமது உணவுக்கு கலாச்சார வளர்ச்சியின் முதல் வித்தான கருப்பட்டியின் ஆச்சர்யமான அறிவியல் தகவல்கள் பற்றி அடுத்த வாரம் காணலாம்.

இத்தொடருக்காக அறிவியல் ரீதியான தகவல்களைத் தந்து உதவும் அமெரிக்கா வாழ் விஞ்ஞானி திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களுக்கு nativespecial.com இன் நன்றிகள்.

“தமிழர் உணவின் அறிவியல்”- அடுத்த பகுதி.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Deepavali Sweets Online

Native Special

ஆறு வகையான மிகச் சிறந்த இனிப்பு பெட்டகங்களை இந்த வருட தீபாவளிக்கு அறிமுகம் செய்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல் இணையம். இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தின் இந்த தீபாவளி பரிசுப் பெட்டகங்கள் வெகுவாக அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

Native Special

முதன் முறையாக நம்ம ஊர் பாக்கு மட்டையினைக் கொண்டு சிறந்த தீபாவளி பெட்டகத்தினை வடிவமைத்துள்ளார்கள். 200 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை நமது தேவைக்கேற்ப இனிப்புகள் கலவையினை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். திருநெல்வேலி நெய் அல்வா, கருப்பட்டி கடலை உருண்டை,கருப்பட்டி நெய் மைசூர்பாக் என நம்ம ஊரின் பாரம்பரிய பண்டங்கள் அனைத்தையும் இந்த தீபாவளிக்கு நாம் பரிசளிக்கலாம்.

நீங்கள் ஒரு நிறுவனம் நடத்துபவரென்றால் தங்களின் பணியாளர் அல்லது தொடர்புகளுக்கு தீபாவளி இனிப்பு பாக்ஸ் வழங்க நேட்டிவ்ஸ்பெஷலின் இனிப்பு பெட்டகங்கள் மிகச் சிறந்த தேர்வு.

இனிப்பு பெட்டகங்களின் பெயர்கள் முதற்தொண்டு நம் மண் வாசனையினைக் கொண்டு வந்திருக்கிறோம். பேர் உவகைப் பெட்டகம், பனஞ்சுவைப் பெட்டகம் (கருப்பட்டி இனிப்புகள் மட்டும் கொண்டது) என பல வகையான இனிப்பு பெட்டகங்கள் உண்டு.

முன்னதாக பதிவு செய்வோருக்கு 10% தள்ளுபடி இந்த இரு நாட்களுக்கு மட்டும். எங்களது எண்ணில் தொடர்பு கொண்டு புக் செய்தால் போதும், மினிமம் 25 பாக்ஸ்கள் புக் செய்ய வேண்டும்.

தொடர்புக்கு:  +918098619006

இது தவிர நேட்டிவ்ஸ்பெஷலின் பண்டங்களை ஆனலைனில் ஆர்டர் செய்து வீட்டில் ருசிக்கு இந்த லிங்கில் செல்லலாம் https://www.nativespecial.com

தமிழர்களின் கைமருந்து நெல்லிக்காய் சாறு

Amla

தமிழர்களின் கைமருந்து நெல்லிகாய் சாறு (nellikai juice/amla juice benefits) :-

இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர்.அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100 க்கும் அதிகமாக இருந்தது.இன்றைய சூழ்நிலையில் மனிதன் நவீனம் என்ற பெயரில் உடல்பருமன்,சிறுவயதிலே கண் குறைப்பாடு ,இளநரை,சொத்தைப்பல்,நீரிழிவு நோய் என நோய்களை விலைகொடுத்து வாங்கிவிட்டான். இன்று ஒருவர் 100 வயதை அடைந்தாலே விழா கொண்டாடும் அவலம் நம்மிடையே வந்துவிட்டது.காரணம் ,நமது ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு தீய கொழுப்புகளை மட்டும் சேர்த்து உடலினை பராமரிக்க மறந்துவிட்டோம் .

நம் முன்னோர்கள் உணவை மருந்தாக பயன்படுத்தினர் .ஆனால் நாம் மருந்தைத்தான் உணவாக பயன்படுத்துகிறோம் .இந்த நிலையை முழுமையாக மாற்ற தற்போது இயலவில்லை என்றாலும் அதற்கான முயற்சியை செய்தால் தான் நம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக அமையும்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நாம் மறந்து போன ,மறைந்து போன நமது ஆரோக்கியமான பாரம்பரிய பண்டங்களை ,உணவுகளை மீண்டும் அறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் .அந்த வகையில் நம் தமிழர்கள் பயன்படுத்திய உணவு மருந்துகளில் ஒன்று “நெல்லிக்காய்”

நெல்லிக்காய்க்கும் ,தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பலவழிகளில் அறியலாம்.ஆயுர்வேத சாஸ்திரம் முதல் சங்ககால செய்யுள்கள் வரையிலும் நெல்லிக்காயை பற்றி சொல்லாத இடங்களே இல்லை.அந்த அளவிற்கு நெல்லிக்காயின் பயன்கள் அளவில்லாதது.

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை சக்தியாக மாற்றுவதில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது .அதில் ஏற்படும் கற்களை கரைக்க நெல்லிசாறு ஒரு சிறந்த மருந்து .

கண்ட உணவுகளை உண்ணுவதனால் வயிற்றில் ஏற்படும் கோளாறுகள்,புண்களுக்கு நெல்லி ஒரு சிறந்த நிவாரணி.உடல் பருமனை குறைக்க உதவும்

ரத்தக்குழாய்களில் ஏற்படும் புற்றுகளை தடுத்து அளிக்கிறது .எனவே புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்து .

கர்பிணி பெண்களுக்கு மிகவும் ஏற்றது .முக்கியமாக மகப்பேறுகாலங்களில் உதவும்

இத்தனை பயன்களை தருவதினால் தினமும் ஒன்று என சாப்பிட்டுவர நம்மை எந்த நோய் தொற்றும் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.

இதை ஜூஸ் செய்து வைத்துக்கொண்டால் நம் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். நெல்லி ஜூஸ் (nellikai juice / amla juice) தினமும் பயன்படுத்தினால் சிறிது காலத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். நன்றி!!


நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை சக்தியாக மாற்றுவதில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது .அதில் ஏற்படும் கற்களை கரைக்க நெல்லிசாறு ஒரு சிறந்த மருந்து .

கண்ட உணவுகளை உண்ணுவதனால் வயிற்றில் ஏற்படும் கோளாறுகள்,புண்களுக்கு நெல்லி ஒரு சிறந்த நிவாரணி.உடல் பருமனை குறைக்க உதவும்

ரத்தக்குழாய்களில் ஏற்படும் புற்றுகளை தடுத்து அளிக்கிறது .எனவே புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்து .

கர்பிணி பெண்களுக்கு மிகவும் ஏற்றது .முக்கியமாக மகப்பேறுகாலங்களில் உதவும்

இத்தனை பயன்களை தருவதினால் தினமும் ஒன்று என சாப்பிட்டுவர நம்மை எந்த நோய் தொற்றும் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.

இதை ஜூஸ் செய்து வைத்துக்கொண்டால் நம் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். நெல்லி ஜூஸ் (nellikai juice / amla juice) தினமும் பயன்படுத்தினால் சிறிது காலத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். நன்றி!!
Now readily available/ Buy Now @  https://nativespecial.com/product/raw-amla-juice-online/

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

 

தலைமுறை தழைக்க வேர்கடலை

Peanuts

தலைமுறை தழைக்க உதவும் வேர்கடலை:

வேர்க்கடலை (நிலக்கடலை) ஒரு மிகச்சிறந்த பயிர் வகை. உலக அரசியல் கவனத்தை பெரும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது வேர்க்கடலை. இந்தியாவிலும் சீனாவிலும் அதிகம் பயன்பாட்டில் உள்ள பயிர் நிலக்கடலை.

16 ம் நூற்றாண்டில் உலகம் முழுக்க பரவ தொடங்கியது வேர்க்கடலை.

நம் ஊரில் நமது சமையல் பயன்பாட்டில் முக்கியம் பங்குவகிப்பது கடலையில் இருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய் தான், இதனால் இயற்கையாகவே உலகில் மற்ற இன மக்களை சந்தித்த உடல் உபாதைகள், நோய்கள் நமக்கு வரவில்லை. வேர்கடலை இனப்பெருக்கத்திற்கு மிகவும் உகந்தது. காட்டில் கடலை சாகுபடி இருக்கும் காலத்தில் எலிகள் அதிக குட்டிகள் ஈனும், அதேபோல் கடலை செடி மேயும் ஆடு,மாடு என்று அணைத்து உயிர் இனங்களும் குறையின்றி குட்டிகள் ஈனும். மனிதனுக்கும் அவ்வாறே. வேர்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாபிட்டு வருபவர்கள் நம்ம ஊர் இலவட்டகல்லை அசால்டாக தூக்கிவிடுவர்.

வேர்கடலை சத்துக்கள்:

நிறைய புரதம் – இறைச்சி, முட்டை இல் இருப்பதைவிட அதிக புரதம்.

இரும்புசத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் E, பாஸ்பரஸ், தையாமின், நையாசின்.

நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது (Reference Times Of India – Health & Fitness: https://www.facebook.com/TimesofIndia/videos/2060720077369590/)

அந்நிய ஆட்சியில் நாம் இருந்தபோது ஆங்கில மருத்துவம் சொல்லு சில விஷயங்களுக்கு நமது வேர்க்கடலை இடைஞ்சலாக இருந்தது அதற்காக பல திட்டமிட்ட தகவல்கள் பரப்பப்பட்டன. உதாரனமாக நிலக்கடலை சாபிட்டால் உடல் எடை கூடும் என்று ஒரு தவறான புரிதல் உள்ளது அது உண்மையில்லை, மாறாக உடல் எடை குறைக்கும் ஒரு நல்ல டயட் உணவுதான் வேர்க்கடலை.

இவ்வளவு சத்துக்களும், மகத்துவமும் கொண்ட வேர்க்கடலை முன்பை விட இன்று நமது பயன்பாட்டில் இருந்து குறைத்திருக்கிறது. மற்ற உலக நாடுகளில் வேர்கடலை பயன்பாடு மிகவும் அதிகரித்திருக்கிறது. நம்மிடம் பாதாம் பிஸ்தா போன்ற அணிய பொருட்களை சந்தைபடுத்த வேர்கடலைமீது திட்டமிட்டே பல தவறான பரப்புரைகள் செய்யப்பட்டன, கடலை எண்ணெய் கொழுப்பை அதிகரிக்கும், இதயகொளறு ஏற்ப்படுத்தும், உடல் எடை கூடும் போன்ற பல தவறான செய்திகள் பரப்பப்பட்டன. நாமும் அதன் காரணமாக நமது வாழ்க்கை முறைமாற்றதில் நமது மண்ணிற்கு சிறிதும் தொடர்பில்லாத பெயர்தெரியாத பல எண்ணைகளை பயன்படுத்துகிறோம். அதுமட்டும் இல்லாமல் நமது பாரம்பரிய வாழ்க்கை முறையில் நிலக்கடலையில் செய்த பல பலகாரங்கள் தினசரி பயன்பாட்டில் இருந்தன. அதில் ஏறத்தாழ அனைத்தையும் இன்று இழந்துவிட்டோம்.

இன்றைய இளைய சமுதாயம் கல்வியில் அடுத்தகட்டத்தில் நின்று நாம் இழந்த பல விசயங்களை உண்மை அறிந்து மீட்டெடுக்கும் முயற்சியில் செயல்படுவது ஆறுதல் தருகிறது.

வேர்க்கடலையும் வெல்லமும் சேர்த்து செய்த கடலை உருண்டை (Kadalai Urundai)குழந்தைகளுக்கு மிகவும் ஆரோகியம் தரும் ஒரு பலகாரம். தினமும் உட்கொள்வது சாலச்சிறந்தது. உயர் நாட்டு ரக வேர்க்கடலை சுத்தமான குண்டு வெல்லம் சேர்த்து வீட்டு தயாரிப்பில் “வேர்க்கடலை உருண்டை” (Kadalai Urundai) ருசிக்க விரும்புவோர் நேடிவ்ஸ்பெஷல்.காம் (https://www.nativespecial.com/product/idiccha-verkadalai-urundaicrushed-peanut-urundai) என்ற இணைய லிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

நம் பாரம்பரிய உணவு முறை தகவல்களை உங்களுடன் பகிர்த்துகொன்டத்தில் மகிழ்ச்சி அடைகிறோம்! நன்றி!!