பிப்பாலி எனும் மிளகின் வரலாறும், சிறப்பும் – தமிழர் உணவின் வரலாறு பகுதி 5

(முந்தைய பகுதி)

முத்துக்கு இணையாக உலக வணிகத்தில் மதிப்பைப் பெற்றிருந்த மிளகுதான் சில நூறு வருடங்களுக்கு முன் உலகவரைபடத்தையே மாற்றி அமைத்தது என்றால் மிகையாகாது. முதன் முதலில் காரத்திற்கு உகந்த பொருளாகத் தமிழர்களால் கண்டெடுக்கப் பட்டது பிப்பாலி எனும் மிளகு. மிளகின் உண்மையான தமிழ்ப் பெயர் பிப்பாலி அதன் மறுவல் தான் கிரேக்கத்தில் பிப்பர் என்றாகி இன்று ஆங்கிலத்தில் பெப்பர் என்று அழைக்கப் பெறுகிறது. தமிழில் மிளகாய் பயன்பாட்டிற்கு வந்த பின் காரத்திற்காக பயன்படுத்தப் படுவதால் பிப்பாலி பெயர் மறைந்து மிளகு என்றபெயர் பயன்பாட்டிற்கு வந்தது.

காரத் தன்மையை நெருப்புக்கு உவமைப் படுத்துவது இயல்பு. காரணம் சூடு பட்டால் உடலில் என்னென்ன சுரப்பிகள்,உணர்வுகள் வினை ஆற்றுமோ அவை அனைத்தும் காரத்திற்கும் வினை ஆற்றும். எனவேதான் காரம் எஸ்.அச்.யு (ஸ்கொபீல்டு ஹீட் யூனிட்) எனப்படும் சூட்டின் அலகினைக் கொண்டு அளக்கப் படுகிறது. இந்த இயல்பின் காரணமாக காரத் தன்மை கொண்ட பொருட்கள் பாக்டீரியாக்களைக் களைந்து விடும் தன்மை கொண்டதாக இருக்கும். எனவேதான் மிளகாய்க் காரம் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது நல்ல பாக்டீரியாக்கள் களையப்பட்டு அல்சர் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் மிளகு மட்டும்தான், காரம் இருந்தாலும் அதற்கான தீயவிளைவுகள் எதுவும் அற்ற பொருள். எனவேதான் மிளகு காரத் தன்மைக்கான முதன்மைப் பொருளாகவும் உலகவணிகத்தின் முக்கியப் பொருளாகவும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது. தமிழகத்தில் மிளகாயின்பயன்பாடு சமீபத்திய காலங்களில் தான் அதிகரித்துள்ளது மிக நெடுங்காலமாக நமது உணவுமுறையில் இருந்து வருவது மிளகுதான்.

உலகின் பல்வேறு இடங்களில் மிளகு கிடைக்கப் பெற்றாலும், சரியான காரத் தன்மை கொண்ட மிளகு வகையைத் தேர்வு செய்து அதன் உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்த ஒரே சமூகம் தமிழ்ச் சமூகம்தான். ஒற்றை வரியில் கூறி முடித்தாலும் இது பல நூறு ஆண்டுகள் நிகழ்த்தப் பட்ட தொடர் முயற்சியின்விளைவாகும். சிந்தனைத் திறனும், சிறந்த சமூகக் கட்டமைப்பும் கொண்ட சமூகத்தினாலேயே இதனைச் சாத்தியபடுத்த முடியும். எடுத்துக் காட்டாக இன்று அமெரிக்காவில் நிகழ்த்தப் பெரும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியக்காரணம் அங்குள்ள கட்டமைப்பு. எனவே சிறந்த கட்டமைப்பு இல்லாமல் எந்த ஒரு புது முயற்சியும் வெற்றி பெற இயலாது.


பெரும் மதிப்பு மிக்க பொருளின் உலகின் மொத்த வணிகமும் கையில் இருந்த பொழுதும் உற்பத்தியைப் பெருக்க இன்று தேயிலைத் தோட்டங்கள் அமைப்பது போல் மோனோகல்ச்சர் செய்யாமல் பெரும் இயற்கைப் புரிதலுடன் காடுகளின் ஊடாகவே மிளகின் உற்பத்தியைப் பெருக்கினர். எனவேதான் இன்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகிலேயே அதிகமான தாவர வகைகளைக் கொண்ட இடமாகத் திகழ்கிறது.

உலக வணிகம், இயற்கைப் புரிதலுடனான உற்பத்தி, புதிய விடயங்களின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பு எனப் பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னரே தேர்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததற்கு மிளகும் அதன் பிப்பாலி எனும் பெயருமே மிகப் பெரும் சான்று.

பாரம்பரிய கொல்லிமலை மிளகினைத் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

(அடுத்த பகுதி)

×
0