தமிழர்திருநாளாம் தைபொங்கல்

தமிழர்திருநாளாம் தைபொங்கல் :-

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி” என்ற தனி சிறப்புக்குரியது தமிழ் சமூகம்.இன்று பல அறிவியல் அறிஞர்கள் நிரூபணம் செய்யும் பல உண்மைகளை அன்றே தமிழன் பயன்படுத்தி உள்ளான்.அவனின் அறிவும் ஆற்றலும் அவ்வளவு நுண்ணியமாக இருந்தது.அவனின் ஒவ்வொரு செயல்களுக்கும் பின்னால் ஒரு மருத்துவ பின்னனி காரணம் இருந்தது,இது அவன் நீண்ட ஆயுளோடு வாழ வழி வகுத்தது.தமிழர்கள் என்றாலே பண்டிகளுக்கு பஞ்சம் இருக்காது.விழாக்களை கொண்டாடுவதில் தமிழர்களுக்கு நிகரானவர் உலகில் யாவரும் இல்லை.அதே போல்அவர்கள் கொண்டாடும் அணைத்து பண்டிகைகளுக்கும் ஒரு பின்னணி காரணம் இருக்கும். அவ்வாறு தமிழர் பண்டிகையில் முக்கிய ஒன்றான பொங்கல் பண்டிகையின் சிறப்பு, கொண்டாட உண்மையான காரணம் என்ன?என பொங்கல் பற்றிய சுவாரசிய தகவல்களை காண்போம்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி”:-

போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். போகி பண்டிகை என்றாலே வீட்டில் உள்ள பழையனவற்றை தீயிட்டு கொளுத்துவது மட்டுமே என்று இன்றைய தலைமுறையினர் தவறாக அறிந்துள்ளனர்.ஏன் கொண்டாடுகிறோம் என்பதன் காரணம் யாரும் அறிந்திருப்பது இல்லை.

உண்மையில் போகி பண்டிகையின் முக்கிய நோக்கம் தூய்மையை பேணிக்காப்பது தான்.ஆச்சரியமாக இருக்கிறதா! ஆம் நாம் இன்று அதற்கு மாறாக தான் கொண்டாடி வருகிறோம்.பருவ நிலைமாற்றங்களின் அடிப்படையில் ஒரு வருடத்தை தமிழன் இரண்டாக பிரித்தான்.ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தென் கிழக்கு பகுதியில் சூரியன் உதிக்கிறது.அதன் பிறகு வடகிழக்கு பகுதியில் சூரியன் உதிக்கிறது.இதனால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தினால் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவே தூய்மையை பேணி கொண்டாடும் நாளாக போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.தூய்மையை பேண கொண்டாடப்பட்ட போகி பண்டிகை இன்று முற்றிலும் மாறாக காற்றை மாசுபடுத்துவதாக மாறிவிட்டது. வாழக்கூடிய குடிருப்புகளையும் மேலும் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்தால் மட்டும் போதாது.உடலின் அகத்தையும் தூய்மையாக பேண வேண்டும் என்பதற்காக கொண்டாடப்படும் ஒன்று.

காப்பு கட்டுதல்:-

வீட்டின் சுத்தம் கருதி மக்கள் வண்ணம் பூசுவார்கள்.வீட்டின் சுத்தம் போல தங்களின் அக உடலை சுத்தம் செய்யவே வீட்டில் காப்பு கட்டபடுகிறது.காப்பு கட்டுவதற்கு கிருமி நாசினியாக இருக்கும் வேப்பிலை,ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய ஆவாரம் பூ ,சிறுநீரகத்தை சுத்தப்படுத்தக்கூடிய பூவாரப்பூ என்ற சிறுபீழை இந்த மூன்று மூலிகை கொண்டு காப்பு வீட்டின் முற்றத்தில் கட்டப்படுகிறது.இந்த மூன்று மூலிகைகளின் நற்குணங்களை மக்கள் அறிந்திட வேண்டும் என்பதற்காக கண்களில் படும்படி வீட்டின் முற்றத்தில் கட்டப்படுவதாக சித்த மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தை பொங்கல் திருநாள்:-

பொங்கல், தமிழர்களின் மிக சிறப்பான கொண்டாட்ட பண்டிகைகளுள் ஒன்று.அன்றைய தினம் எண்ணெய் குளியல்,புத்தாடை ,கரும்பு,சக்கரை பொங்கல்,விளையாட்டுப்போட்டிகள் என எத்தனை மகிழ்ச்சியும்,கொண்டாட்டமும் நிறைந்து காணப்படும் .ஒரு நிமிடம், உங்களில் ஒருவரை ஏன் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம்? என்றால் நம்மில் பலரது கருத்து, வழிவழியாக கொண்டாடுவதினால் கடைபிடிக்கிறோம் என்பதாகவும்,மேலும் பலர் உழவர் திருநாள் என்பதால் பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம் என்றும் கூறுவர்.உண்மை பின்னணி பற்றி காண்போமா!

உண்மையில் பொங்கல் சங்க காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது,வேறு பெயர்களை கொண்டு.தற்போதய பொங்கல் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.தனது உழைப்பிற்கு உதவிய கால்நடைகளுக்கும் உறுதுணையாக இருந்த இயற்கைக்கும் நன்றி சொல்லும் விதமாக உழவர்களால் கொண்டப்படும் ஒரு விழாவென பொங்கல் அமைகிறது.ஆனால் இதன் முக்கிய நோக்கம் அதுவல்ல.தமிழர்கள் இயற்கையை கடவுளாக வழிபட்டனர்.அது மரமாகட்டும்,அல்லது உழவுக்கு உதவிய கால்நடைகளாகட்டும் அந்த மரியாதையின் நிமித்தம் தான் இந்த ஜல்லிக்கட்டும் கூட .கால்நடைகளையும், இயற்கையையும் ஆராதிக்கும் தமிழர்கள் இதனை விழாவாக கொண்டாடும் வழக்கம் சங்க காலத்திலிருந்து வந்துள்ளது.

முதலில் பொங்கல் சந்திரனை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டது.சந்திரனின் வளர்ச்சியை அடிப்படியாக கொண்டு தான் முதலில் நாட்கள் கணக்கிடப்பட்டது.அதன் பின்தான் சூரியனின் நகர்வினை அடிப்படையாக கொண்டு நாட்கள் கணக்கிடப்பட்டது.சந்திரனை அடிப்படையாக கொண்ட கணக்கீட்டிற்கு “சந்திரமானம்” என்றும் சூரியனை அடிப்படையாக கொண்ட கணக்கீட்டிற்கு “சௌரவமானம்” என்றும் பெயர்.

.பூசநட்சத்திரத்தில் முழுநிலா வருவது தான் தைபூசம்.சங்க இலக்கியங்களில் “தைஇதயதிங்கள்” என தை மாதம் குறிப்பிடபடுகிறது. தைபூச முழுநிலா நாளில்”‘நீர்வூரும்” என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.தையில் நீர்வளம் பெருகி உணவு உற்பத்தி அதிகரித்து நாடு நலமும், வளமும் பெற நோன்பு நோற்பது தான் “தைநீராடல் “.பூரணிமாத கணக்கின்படி மார்கழி மாத பௌர்ணமியில் தொடங்கி தைபௌர்ணமியில் அதாவது தைப்பூசம் அன்று இந்த விரதம் முடிவடையும்.தைப்பூசத்தை கொண்டாட்டத்திலிருந்தே பொங்கல் கொண்டாட்டம் வந்தது.இதனை உறுதிபடுத்தும் விதமாக

சம்பந்தர் தன் மயிலாப்பூர் பதிகத்தில் ,

“நெய்பூசும் ,பொன்புழுக்கள் நேரிழையார்க்

கொண்டாடும் தைப்பூசம் ”

என சுட்டுகிறார்.எனவே சங்ககாலத்தில் “புழுக்கள்” என்று பொங்கலை குறிப்பிட்டுள்ளதை நாம் காணலாம் ,இதனைக்கொண்டே நாம் புழுங்கல் அரிசி என வழக்கத்தில் உள்ள அரிசியினை கூறுகிறோம்.20ம் நூற்றாண்டில் தென் நகரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் முதன் முதலாக வாழ்த்து அட்டையை அச்சிட்டார்.அதன் மூலமே தைபொங்கலுக்கு உழவர் திருநாள் என பெயர்வந்தது.ஐரோப்பியர்களின் வருகையும் நம் அன்றாட நடவடிக்கைகளும் சேர்ந்து ஆங்கில காலண்டர்களின் கணக்கீட்டின் படி ஆங்கிலத்தில் தேதிகள் அடைய நேர்ந்தது.

மாட்டுப்பொங்கல் :-

தை பொங்கலின் மறுநாள் மாட்டுப்பொங்கல் . தங்களுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி செய்யும் விதமாக கொண்டாடப்படும் ஒன்று.பின்னணி காரணங்கள் என்று ஏதும் இல்லை நம்மால் வழக்கத்தில் கொண்டுவரப்பட்டது.

ஜல்லிக்கட்டு :-

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதானவீர விளையாட்டு.

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில்உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.

காணும் பொங்கல் ;-

காணும் பொங்கல் என்பது நம் உறவினர்களிடையே ஏற்பட்ட பகையுணர்களை நீக்க அவர்களோடு ஒற்றுமையாக இருக்கவேண்டி நாமாக ஏற்படுத்திக்கொண்ட ஒன்று.அந்த நாளில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று மாமிசம் சமைத்து சாப்பிடுவது என்பது நல்ல பாசப்பிணைப்பினை ஏற்படுத்தும்.

இவ்வாறென விமர்சையாக கொண்டாடப்படும் பொங்கலின் போது கண்டிப்பாக தின்பண்டங்களுக்கு பஞ்சமகா இருக்காது.அன்றிருந்த காலங்களில் வீட்டில் இருக்கும் பாட்டிகள் பல பலகாரங்களை நமக்கு செய்து தருவார்கள். ஆனால் தற்போது உள்ளநகர வாழ்க்கையில் குழந்தைகள் பல வண்ணவிளம்பரங்களின் ஈர்ப்பினால் பைகளுக்குள் அடைக்கப்பட்ட வேதிப்பொருட்களை உண்ணுகின்றனர்.இதனால் பண்டிகை அதுவுமாக நோய்வாய்படும் அபாயம் உள்ளது.மேலும் இப்போதுள்ள நகர வாழ்க்கையில் நம்மால் நேரம் ஒதுக்கி நம் குழந்தைகளுக்காக பண்டங்களும் செய்து தர இயலவில்லை.

இந்த கவலையை பூர்த்தி செய்யும் விதமாக முற்பட்டுள்ளனர் நேட்டிவ் ஸ்பெஷல் நிறுவனத்தினர்.அழிந்து விட்ட நம் பாரம்பரிய பண்டங்களை மீட்டெடுக்கும் விதமாக அதனை அழியாமல் அனைவரின் பயன்பாட்டிற்கு கொண்டுவர செயல்பட்டுவரும் இணையதள நிறுவனம் தான் நேட்டிவ் ஸ்பெஷல்.தற்போதுள்ள தொழில்நுட்ப உதவிகளோடு நம் பாரம்பரிய பண்டங்களான எள்ளு உருண்டை பொட்டுக்கடலை உருண்டை,அதிரசம்,கருப்பட்டி மைசூர்பாக்கு,ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா,இனிப்பு சீடை ,கார மிச்சர்,சாத்தூர் சேவு,சின்ன வெங்காய முறுக்கு என நமது பாரம்பரிய பண்டங்களை வழங்கி வருகின்றனர் இணையத்தளம் மூலம்.

பொங்கலின் கரும்போடு நமது பாரம்பரிய தின்பண்டங்களும் இருக்க விரும்பினால் ஆர்டர் செய்யுங்கள் நேட்டிவ் ஸ்பெஷல்.காம் .பொங்கலை முன்னிட்டு பல காம்போ சலுகைகளும் உண்டு.இந்த பொங்கல் இனிய பொங்கலாக அமையட்டும் நம் பாரம்பரிய பண்டங்களோடு!

நன்றி!

×
0